ஜோதிகாவின் 50 வது படமான உடன்பிறப்பே வரும் அக்டோபர் 14 ஆயுதபூஜையை முன்னிட்டு வெளியாகிறது. அதனையொட்டி படத்தில் நடித்தது குறித்து ஜோதிகா பேட்டியளித்தார்.
உடன்பிறப்பே படத்தை இரா . சரவணன் என்பவர் இயக்கியுள்ளார் . இவர் பத்திரிகையாளராக இருந்து இயக்குனரானவர் . இவர் சொன்ன கதை ஜோதிகாவுக்கும் , சூர்யாவுக்கும் பிடித்துப்போக உடனே தயாரிப்பது என்று முடிவெடுத்து , தற்போது படம் வெளியாக உள்ளது . சூர்யாவின் 2 டி என்டர்டெயின்மெண்ட் படத்தை தயாரித்துள்ளது .
கிராமத்துப் பின்னணியில் தயாராகியிருக்கும் இந்தப் படம் நவீன பாசமலர் என்கிறார் ஜோதிகா . அண்ணன் , தங்கைப் பாசம் இதில் பிரதானமாக பேசப்பட்டுள்ளது . அண்ணனாக சசிகுமாரும் , தங்கையாக ஜோதிகாவும் , ஜோதிகாவின் கணவராக சமுத்திரகனியும் நடித்துள்ளனர் . கணவருக்கும் , அண்ணனுக்கும் இடையிலான கருத்து மோதலின் நடுவில் மாட்டிக் கொண்ட தங்கை கதாபாத்திரம் ஜோதிகாவுக்கு என்கின்றன செய்திகள் . இதில் அவர் ஊரே மதிக்கும் மீனாட்சி என்ற வேடத்தை செய்துள்ளார் .
" என் மாமியார் உள்பட என் கணவரின் குடும்பத்தினரை முன்மாதிரியாகக் கொண்டு மீனாட்சி கதாபாத்திரத்தில் நடித்தேன் " என ஜோதிகா கூறியுள்ளார் . கொரோனா ஊரடங்கு காலக்கட்டம் அதற்கு உதவியாக இருந்தது என தெரிவித்துள்ளார் .
Also read... விஜய் 67 படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் இவர்களா?
தனது 50 வது படம் திரையரங்கில் வெளியாகாமல் ஓடிடியில் வெளியாவதில் ஜோதிகாவுக்கும் வருத்தம்தான் . கொரோனா இரண்டாம் அலை எப்போது முடியும் , எப்போது திரையரங்குகள் திறக்கும் என்பது தெரியாத நிலையில் , அமேசான் பிரைம் வீடியோவுடன் 2 டி என்டர்டெயின்மெண்ட் போட்டுக் கொண்ட ஒப்பந்தம் என்பதால் , வேறு வழியின்றி ஓடிடியில் படத்தை வெளியிடுகின்றனர் .
சூர்யா ரசிகர்களின் நெடுநாளைய கேள்வி , எப்போது சூர்யா மீண்டும் ஜோதிகாவுடன் நடிக்கப் போகிறார் ? அந்த எதிர்பார்ப்பு சூர்யா , ஜோதிகாவுக்குமே உள்ளது . நல்ல கதை அமைந்தால் நடிக்க வேண்டியதுதான் என இந்தக் கேள்விக்கு ஜோதிகா பதிலளித்துள்ளார் . அந்த நல்ல கதை விரைவில் கிடைக்கட்டும் . Published by: Vinothini Aandisamy
First published: October 12, 2021, 11:17 IST
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
Tags: Actress Jyothika