ஜோதிகாவின் இமயமலை ட்ரிப் - லைக்ஸை குவிக்கும் வீடியோ!

ஜோதிகா

இன்ஸ்டாகிராமில் புதிதாக இணைந்துள்ள ஜோதிகா தனது இமயமலை பயண வீடியோவை அதில் பகிர்ந்துள்ளார்.

  • Share this:
    நடிகை ஜோதிகா சமீபத்தில் தான் இமயமலை சென்ற ட்ரிப்பின் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

    90-களின் இறுதியில் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை ஜோதிகா. அறிமுகமே அஜித்துடன் வாலி படத்தில் தான். அதில் சோனா என்ற சிறப்புத்தோற்றத்தில் நடித்தார். அதன் பிறகு சூர்யாவுடன் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் முழுநீள ஹீரோயினானார். பின்னர் விஜய்யுடன் குஷி படத்தில் நடித்தார்.

    பின்னர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான ஜோதிகா, கமலுடன் தெனாலி, வேட்டையாடு விளையாடு, ரஜினியுடன் சந்திரமுகி ஆகியப்படங்களிலும் நடித்தார். தனது முதல் படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த சூர்யாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட ஜோதிகாவுக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர்.

    இந்நிலையில் திருமணத்துக்குப் பிறகு ஆறு ஆண்டுகள் நடிக்காமல் இருந்த ஜோதிகா, பின்னர் 36 வயதினிலே படத்தின் மூலம் மீண்டும் திரையுலகிற்கு ரீ எண்ட்ரியானார். அதன் பிறகு தனக்கு முக்கியத்துவம் வாய்ந்த முதிர்ந்த கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். ‘மகளிர் மட்டும்’, ‘ராட்சசி’, ‘ஜாக்பாட்’, ‘பொன்மகள் வந்தாள்’ என ஜோதிகா திருமணத்துக்குப் பிறகு நடித்தப் படங்களை குறிப்பிடலாம். இதற்கிடையே மணிரத்னம் இயக்கிய செக்க சிவந்த வானம் படத்தில் அரவிந்த்சாமிக்கு ஜோடியாக நடித்தார்.



     




    View this post on Instagram





     

    A post shared by Jyotika (@jyotika)






    தற்போது ஜோதிகாவின் நடிப்பில் ‘உடன்பிறப்பே’ என்ற திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படம் வருகிற அக்டோபர் மாதம் நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் இன்ஸ்டாகிராமில் இணைந்தார். இதையடுத்து தற்போது இமயமலை சென்ற போது எடுக்கப்பட்ட வீடியோவை அதில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை தற்போது வரை 5 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் லைக் செய்துள்ளனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: