Home /News /entertainment /

என் வாழ்க்கையின் நிறைவான 21 நாட்கள்... எமோஷனல் பதிவுடன் ஜோதிகா வெளியிட்ட வீடியோ

என் வாழ்க்கையின் நிறைவான 21 நாட்கள்... எமோஷனல் பதிவுடன் ஜோதிகா வெளியிட்ட வீடியோ

சூர்யா - ஜோதிகா

சூர்யா - ஜோதிகா

இந்தியர்களாகிய நாம் நமது நாட்டின் மிகப்பெரிய கண்டுபிடிப்புகளான ஆயுர்வேதம் மற்றும் யோகாவைப் பின்பற்றி அவற்றிற்கு மரியாதை கொடுப்போம் என ஜோதிகா கேட்டுக் கொண்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    கோலிவுட்டின் சூப்பர் ஜோடிகளான சூர்யாவும் ஜோதிகாவும் தங்கள் ரசிகர்களுக்கு பல கப்புள்ஸ் கோல்ஸை நிர்ணயிக்கிறார்கள். தங்களின் சொந்த தயாரிப்பான 'ஜெய் பீம்' திரைப்படம் அமேசான் ப்ரைமில் வெளியான பிறகு அவர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு சுற்றுலா சென்று சமீபத்தில் வீடு திரும்பினர்.

    இதையடுத்து சூர்யாவும் ஜோதிகாவும் புத்துணர்ச்சியூட்டும் விடுமுறைக்காக கேரளாவுக்குச் சென்றனர். அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்த ஜோதிகா, “ஆயுர்-காலம், வேத-அறிவு. ஆரோக்கியமும் வளமும் மனம், உடல் மற்றும் உயிர் ஆகியவற்றுக்கு இடையேயான நுட்பமான சமநிலையை சார்ந்தது என்ற நம்பிக்கையின் அடிப்படையில், 3000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவால் கூறப்பட்ட ஒரு விஞ்ஞானம். ராஜா கடற்கரையில் (திருச்சூர்) எனது வாழ்க்கையின் மிகவும் நிறைவான 21 நாட்களை செலவழித்தேன். குணப்படுத்தும் உண்மையான சக்தி இயற்கையிடம் உள்ளது என்பதை இது நம்ப வைத்தது.

    ஆற்றல் என்பது மனம் மற்றும் ஆன்மாவின் அமைதியில் உள்ளது. ஆரோக்கியம் என்பது உண்மையில் வாழ்க்கை முறையின் சமநிலை. இந்தியர்களாகிய நாம் நமது நாட்டின் மிகப்பெரிய கண்டுபிடிப்புகளான ஆயுர்வேதம் மற்றும் யோகாவைப் பின்பற்றி அவற்றிற்கு மரியாதை கொடுப்போம். மேலும் அடுத்தத் தலைமுறையின் ஆரோக்கியமான எதிர்காலத்திற்காக இந்த மாயாஜால அறிவியலை அறிமுகப்படுத்துவோம். ராஜா கடற்கரை மற்றும் ராஜா தீவில் (திருச்சூர்) உள்ள அனைத்து மருத்துவர்களின் அரவணைப்பு மற்றும் கவனிப்புக்கு நன்றி" எனக் குறிப்பிட்டுள்ளார்.



     




    View this post on Instagram





     

    A post shared by Jyotika (@jyotika)






    சூர்யாவை பொறுத்தவரை சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கியுள்ள 'எதற்கும் துணிந்தவன்' திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இது வரும் பிப்ரவரி 4-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கடுத்து வெற்றிமாறனின் 'வாடிவாசல்' படத்தில் நடிப்பதற்கு முன், இயக்குநர்கள் பாலா மற்றும் சிறுத்தை சிவா இயக்கும் படங்களில் நடிக்கவிருக்கிறார் சூர்யா.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Suriya, Jyothika

    அடுத்த செய்தி