முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / 'காதல் என்பது பாலினம் சார்ந்தது அல்ல... இதயம் சார்ந்தது' - ஜோதிகா!

'காதல் என்பது பாலினம் சார்ந்தது அல்ல... இதயம் சார்ந்தது' - ஜோதிகா!

ஜோதிகா

ஜோதிகா

தற்போது லிஜோமோல் ’அன்னபூரணி’ ’காதல் என்பது பொதுவுடமை’ ஆகிய தமிழ் படங்கள் உள்பட ஐந்து படங்களில் நடித்து வருகிறார்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

காதல் என்பது இரண்டு பாலினம் சார்ந்தது அல்ல, அது இரண்டு இதயம் சார்ந்தது என ‘காதல் என்பது பொதுவுடமை’ படத்தில் போஸ்டரை வெளியிட்டு ஜோதிகா தெரிவித்துள்ளார். காதலுக்கு மரியாதை பட ஹிந்தி ரீமேக்கான 'டோலி சஜா கே ரக்னா' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான ஜோதிகா அதன் பின் தென்னிந்திய மொழிகளில் மட்டுமே நடித்துவருகிறார். தற்போது மம்மூட்டியுடன் இணைந்து காதல் என்ற மலையாள படத்தில் ஜோதிகா நடித்திருக்கிறார்.

இந்நிலையில் ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘காதல் என்பது பொதுவுடமை’ என்ற படத்தின் போஸ்டரை தற்போது வெளியிட்டுள்ளார். அதில் ஜெய் பீம் படத்தில் நடித்த லிஜோமோல் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.  இவர் 2016-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான  மகேஷிண்டே பிரதிகாரம் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிகுமனார். தொடர்ந்து மலையாள படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வந்தார்.

இதனை தொடர்ந்து 2019-ம் ஆண்டு ஜிவி பிராகஷ் குமார் மற்றும் சித்தார்த் நடிப்பில் வெளியான சிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் மூலம் தமிழில் அறிமுகனார் லிஜோமோல். இந்த படத்தில் ஜிவி பிரகாஷின் அக்காவாக நடித்திருந்தார். அதனை தொடர்ந்து ஞானவேல் ராஜா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் படம் மூலம் பிரபலமானார் லிஜோமோல். அந்தப் படத்தில் ராசாக்கண்ணு மனைவி செங்கேணி என்ற கதாபாத்தித்தில் அனைவரது மனதிலும் நீங்காத இடம் பிடித்தார்.

இதனை தொடர்ந்து தற்போது லிஜோமோல் ’அன்னபூரணி’ ’காதல் என்பது பொதுவுடமை’ ஆகிய தமிழ் படங்கள் உள்பட ஐந்து படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் 'காதல் என்பது பொதுவுடமை’ படத்தின் போஸ்டரை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ள நடிகை ஜோதிகா, காதல் என்பது இரண்டு பாலினம் சார்ந்தது அல்ல, அது இரண்டு இதயம் சார்ந்தது என தெரிவித்துள்ளார். இந்தப் படத்தை லென்ஸ் மற்றும் தலைகோதல் படத்தை இயக்கிய ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் லிஜோமோல் உடன் ரோகிணி, வினித், அனுஷா மற்றும் தீபா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actress Jyothika