• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • இன்ஸ்டாகிராமில் இணைந்த ஜோதிகா... முதல் நாளிலேயே மில்லியனை தாண்டிய ஃபாலோயர்கள்!

இன்ஸ்டாகிராமில் இணைந்த ஜோதிகா... முதல் நாளிலேயே மில்லியனை தாண்டிய ஃபாலோயர்கள்!

ஜோதிகா

ஜோதிகா

இன்று இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ள ஜோதிகாவை இதுவரை 1.3 மில்லியன் ஃபாலோயர்கள் பிந்தொடர்கின்றனர்.

  • Share this:
    நடிகை ஜோதிகா இன்ஸ்டாகிராகிராமில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார்.

    90-களின் இறுதியில் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை ஜோதிகா. அறிமுகமே அஜித்துடன் வாலி படத்தில் தான். அதில் சோனா என்ற சிறப்புத்தோற்றத்தில் நடித்தார். அதன் பிறகு சூர்யாவுடன் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் முழுநீள ஹீரோயினானார். பின்னர் விஜய்யுடன் குஷி படத்தில் நடித்தார்.

    பின்னர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான ஜோதிகா, கமலுடன் தெனாலி, வேட்டையாடு விளையாடு, ரஜினியுடன் சந்திரமுகி ஆகியப்படங்களிலும் நடித்தார். தனது முதல் படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த சூர்யாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட ஜோதிகாவுக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர்.

    இந்நிலையில் திருமணத்துக்குப் பிறகு ஆறு ஆண்டுகள் நடிக்காமல் இருந்த ஜோதிகா, பின்னர் 36 வயதினிலே படத்தின் மூலம் மீண்டும் திரையுலகிற்கு ரீ எண்ட்ரியானார். அதன் பிறகு தனக்கு முக்கியத்துவம் வாய்ந்த முதிர்ந்த கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். ‘மகளிர் மட்டும்’, ‘ராட்சசி’, ‘ஜாக்பாட்’, ‘பொன்மகள் வந்தாள்’ என ஜோதிகா திருமணத்துக்குப் பிறகு நடித்தப் படங்களை குறிப்பிடலாம். இதற்கிடையே மணிரத்னம் இயக்கிய செக்க சிவந்த வானம் படத்தில் அரவிந்த்சாமிக்கு ஜோடியாக நடித்தார்.

    தற்போது ஜோதிகாவின் நடிப்பில் ‘உடன்பிறப்பே’ என்ற திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படம் வருகிற அக்டோபர் மாதம் நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.இந்நிலையில் இதுவரை சமூக வலைதளங்களில் இணையாத ஜோதிகா, தற்போது இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Actress Jyotika officially joins Instagram, jyothika, jyothika instagram, Jyotika, jyotika instagram, jyothika marriage date, jyothika age, jyothika religion, jyothika new movie, jyothika instagram account, jyothika first movie tamil, ஜோதிகா இன்ஸ்டாகிராம், ஜோதிகா திருமண தேதி, ஜோதிகா வயது, ஜோதிகா மதம், ஜோதிகா புதிய படம், ஜோதிகா இன்ஸ்டாகிராம் கணக்கு, ஜோதிகா முதல் படம் தமிழ், ஜோதிகா சூர்யா
    ஜோதிகா


    இன்ஸ்டாகிராமில் தனது முதல் பதிவாக இமயமலை உச்சியில் கையில் தேசியக் கொடியை ஏந்தியபடி நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள ஜோதிகா, அது சுதந்திர தினத்தன்று மலையேற்றம் சென்றபோது எடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இன்று இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ள ஜோதிகாவை இதுவரை 1.3 மில்லியன் ஃபாலோயர்கள் பிந்தொடர்கின்றனர்.



     




    View this post on Instagram





     

    A post shared by Jyotika (@jyotika)






    அதே நேரத்தில் ஜோதிகா 4 பேரை ஃபாலோ செய்கிறார். சூர்யா, கார்த்தி, அவர்களின் தங்கை பிருந்தா சிவகுமார், 2டி எண்டெர்டெயின்மெண்ட் என 4 கணக்குகளை பின் தொடர்கிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: