ஆக்ஷன், காமெடி கலவையில் ஜோதிகாவின் அடுத்த படம் ஜாக்பாட்!

ஜோதிகாவின் ஜாக்பாட் படத்திற்கு வாழ்த்து தெரிவித்த சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டுள்ளார்.

news18
Updated: July 23, 2019, 12:02 PM IST
ஆக்ஷன், காமெடி கலவையில் ஜோதிகாவின் அடுத்த படம் ஜாக்பாட்!
ஜோதிகாவின் ஜாக்பாட் பட போஸ்டர்
news18
Updated: July 23, 2019, 12:02 PM IST

ஆக்ஷன், காமெடியில் கலக்கியெடுக்கும் ஜோதிகாவின் ஜாக்பாட் படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகியுள்ளது.


இயக்குனர் கௌதம் ராஜ் இயக்கத்தில் ஜோதிகா நடித்து சமீபத்தில் நடித்து வெளியான படம் ராட்சசி. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து கோலிவுட்டில் பிசியாக உள்ள ஜோதிகா தற்போது ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி, சத்யராஜுடன் இணைந்து நடித்து வருகிறார்.

இதுதவிர எஸ்.ராஜ் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடித்து முடித்திருக்கிறார்.


இந்நிலையில் ஜோதிகா நடித்த ஜாக்பாட் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. `குலேபகாவலி' படத்தை இயக்கிய கல்யாண் இந்த படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் ஜோதிகாவுன் நடிகை ரேவதியும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.மேலும், ஆனந்தராஜ், மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன், யோகிபாபு உள்ளிட்ட நடிகர்களும் இந்த படத்தில் ஜோதிகாவுடன் இணைந்து நடித்துள்ளனர்

Loading...

சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஆனந்த்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். விஷால் சந்திரசேகர் இசையமைக்க, விஜய் படத்தொகுப்பை கவனித்துள்ளார்.

ஜோதிகாவின் ஜாக்பாட் படத்திற்கு வாழ்த்து தெரிவித்த சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டுள்ளார்.Also see...

First published: July 23, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...