முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / வீடா? அரண்மனையா? ரூ. 65 கோடிக்கு வீடு வாங்கிய ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி!

வீடா? அரண்மனையா? ரூ. 65 கோடிக்கு வீடு வாங்கிய ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி!

ஜான்வி கபூர்

ஜான்வி கபூர்

ரூ. 65 கோடியில் ஜான்வி வீடு வாங்கியதுதான் இந்தி திரையுலகில் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகை ஸ்ரீ தேவி – முன்னணி தயாரிப்பாளர் போனி கபூரின் மகள் ஜான்வி கபூர்.

ஜான்வி கடந்த 2018-ஆம் ஆண்டில் இருந்து நடித்து வருகிறார்.

அவ்வப்போது இவர் வெளியிடும் ஒர்க் அவுட் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.

ஜான்வி நடிப்பில் வெளிவந்துள்ள மிலி திரைப்படம் வரவேற்பை பெற்றுள்ளது.

ஜான்வியின் பெற்றோருக்கு சென்னை, மும்பை மற்றும் முக்கிய நகரங்களில் வீடுகள் உள்ளன.

இருப்பினும் சொந்தமாக மும்பை மேற்கு பாந்த்ராவில் வீடு ஒன்றை வாங்கியுள்ளார் ஜான்வி.

சொகுசு அபார்ட்மென்டில் முதல் மற்றும் இரண்டாவது தளத்தை ஜான்வி வாங்கியுள்ளார்.

இதில் பார்க்கிங், ஜிம், நீச்சல்குளம், மினி ஹோட்டல், தியேட்டர் உள்ளிட்ட வசதிகள் உள்ளதாம்.

ஜான்வி வாங்கியுள்ள வீட்டின் விலை ரூ. 65 கோடி இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஜான்வியின் புதிய வீட்டை வாங்கியதற்கான முத்திரைத் தாளின் விலை மட்டும் ரூ. 4 கோடி இருக்கும் என தகவல்கள் கசிந்துள்ளது.

ரூ. 65 கோடியில் ஜான்வி வீடு வாங்கியதுதான் பாலிவுட் திரையுலகில் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.

First published:

Tags: Janhvi kapoor