ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

லாக் இல்லாத பாத்ரூம்.. ஸ்ரீதேவியின் பெயிண்டிங்.. சென்னை வீட்டை சுற்றிக்காட்டிய ஜான்வி கபூர்!

லாக் இல்லாத பாத்ரூம்.. ஸ்ரீதேவியின் பெயிண்டிங்.. சென்னை வீட்டை சுற்றிக்காட்டிய ஜான்வி கபூர்!

ஜான்வி கபூர்

ஜான்வி கபூர்

நடிகை ஜான்வி கபூர் பிரபல மேகசீனிற்காக தனது சென்னை வீட்டை சுற்றி காட்டும் வீடியோ வைரலாகி வருகிறது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  மறைந்த நடிகை ஸ்ரீதேவி - போனி கபூரின் தம்பதியினரின் மூத்த மகள் தான் ஜான்வி கபூர். இவர்களுக்கு குஷி கபூர் என்ற இளைய மகளும் இருக்கிறார். ஜான்வி கபூர் சினிமாவில் 2018 ஆம் ஆண்டு என்ட்ரி கொடுத்தார். இவர் சவாலான திரைக்கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதிலேயே ஆர்வம் காட்டி வருகிறார். சமீபத்தில் ஹெலன் என்ற மலையாள படத்தின் ரீமேக்கான ‘மில்லி’ படத்தில் நடித்திருந்தார். இந்த படம் நேர்மறை விமர்சனங்களை பெற்றது.

  ஜான்வி கபூர் தனது தந்தை போனி கபூருடன் மும்பையில் வசித்து வருகிறார். ஆனால் நடிகை ஸ்ரீதேவியின் சொந்த வீடு சென்னையில் இருக்கிறது. பிரபல 'vogue' மேகசீனிற்காக தனது சென்னை வீட்டை சுற்றி காட்டுகிறார் ஜான்வி. இந்த வீடியோ ‘vogue india' அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.

  ஜான்வி கபூர் இந்த வீடியோவில் வீட்டில் பிரம்மாண்ட கதவை திறந்து வீட்டிற்குள் அழைத்து செல்கிறார். வீட்டில் உள்ள அனைத்து பொருட்களுகும் தனது அம்மா பார்த்து பார்த்து வெளிநாடுகளில் இருந்து வாங்கி வந்த பொருட்கள் என கூறிக்கொண்டே வீட்டை சுற்றி காட்டுகிறார். மேலும் நடிகை ஸ்ரீதேவி வரைந்த பெயிண்டிங் வீட்டின் எல்லா இடத்திலும் இருப்பதை பார்க்க முடிகிறது.

  ‘அம்மா இறந்த பின்பு இந்த வீட்டிற்கு வரவில்லை, அப்பா இந்த வீட்டை மீண்டும் ரிடெக்கரேட் செய்து என்னையும், எனது தங்கையையும் சர்பிரைஸ் செய்தார்’ என கூறுகிறார்.

  also read : அழகூரில் பூத்தவளே..! லாஸ்லியாவின் ரீசன்ட் க்ளிக்ஸ்..

  மேலும் அனைத்து புகைப்படங்களையும் ஒரே இடத்தில் வைத்து லாமினேட் செய்துள்ளனர். அந்த புகைப்படங்களை பார்த்து பழைய நினைவுகளை பகிர்ந்துகொள்கிறார் ஜான்வி.

  பெரும்பாலான தனது குழந்தை பருவத்தை இந்த வீட்டில் தான் செலவிட்டதாக ஜான்வி கூறிகிறார்.  நடிகை ஸ்ரீதேவி கண்டிப்பான அம்மா என்பதால் ஜான்வி கபூர் இந்த வீட்டில் தனது பாத்ரூமை பூட்ட அனுமதியில்லையாம். ஏனென்றால் ஜான்வி கதவை சாத்திவிட்டு ஆண் நண்பர்களுடன் உரையாடுவார் என்பதால் ஸ்ரீதேவி பாத்ரூமில் லாக் வைக்கவில்லையாம். அந்த நினைவு பற்றி கூறிய ஜான்வி தற்போது வரை அந்த பாத்ரூமில் லாக் இல்லை என பல நினைவுகளை பகிர்ந்துகொண்டுள்ளார்.

  ' isDesktop="true" id="841125" youtubeid="jdDcrdACpuM" category="cinema">

  ஜான்வியின் ஹோர் டூர் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  Published by:Tamilmalar Natarajan
  First published:

  Tags: Janhvi kapoor