• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • காதலனுடன் நீரில் மூழ்கி உயிரிழந்த பிரபல நடிகை

காதலனுடன் நீரில் மூழ்கி உயிரிழந்த பிரபல நடிகை

ஈஸ்வரி தேஷ்பாண்டே

ஈஸ்வரி தேஷ்பாண்டே

காரில் இருந்து வெளியே வரமுடியாததால் ஈஸ்வரி மற்றும் சுப்பம் ஆகியோர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

  • Share this:
    காதலனுடன் சுற்றுலா சென்ற நடிகை நீரில் மூழ்கி உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.

    மராத்தி மற்றும் இந்தி மொழி படங்களில் நடித்து வந்தவர் நடிகை ஈஸ்வரி தேஷ்பாண்டே. இந்தப் படங்களின் மூலம் அவர் ரசிகர்களிடம் பிரபலமானார். ஈஸ்வரி கடந்த 15-ம் தேதி தனது காதலன் சுப்பம் டெஜ் (வயது 28) உடன் கோவாவுக்கு காரில் சுற்றுலா சென்றுள்ளார்.

    அங்கு சில நாட்கள் தங்கிவிட்டு, நேற்று முன்தினம் இருவரும் மும்பை திரும்பியுள்ளனர். அப்போது கோவாவின் அர்போரா கிராமத்திற்கு அருகில் வந்தபோது, கார் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் அருகில் உள்ள குட்டையில் மூழ்கியது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதையடுத்து காரில் இருந்து வெளியே வரமுடியாததால் ஈஸ்வரி மற்றும் சுப்பம் ஆகியோர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த காதல் ஜோடிக்கு அடுத்த மாதம் நிச்சயதார்த்தம் நடக்க இருந்த நிலையில், இருவரும் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: