’தளபதி 63’ படத்தில் இணைந்த மற்றொரு ஹீரோயின்!

news18
Updated: April 10, 2019, 12:16 PM IST
’தளபதி 63’ படத்தில் இணைந்த மற்றொரு ஹீரோயின்!
விஜய்
news18
Updated: April 10, 2019, 12:16 PM IST
‘தளபதி 63’ படத்தில் மீண்டும் ஒரு நாயகி இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மெர்சல், தெறி ஆகிய படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய் - அட்லி கூட்டணி தளபதி 63 படத்தின் முலம் இணைந்துள்ளது. நயன்தாரா ஹீரோயினாக நடிக்கும் இந்தப் படத்தில் ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு, கதிர், விவேக், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ், உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

பெண்கள் கால்பந்து விளையாட்டு குறித்த கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இந்தப் படத்தை பிரமாண்டமாக தயாரித்து வருகிறது ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம்.படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈவிபி ஸ்டுடியோவில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தப் படத்தில் மேயாத மான் பட நாயகி இந்துஜா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும், அவருடைய காட்சிகளின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்தப் படம் தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோ பார்க்க: கமல்ஹாசன் உடன் சிறப்பு நேர்காணல்


சினிமா செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  பொழுதுபோக்கு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...