சூப்பர் டூப்பர் வீடியோ - கவர்ச்சியில் அதிரடி காட்டும் இந்துஜா... வறுத்தெடுக்கும் ரசிகர்கள்

news18
Updated: September 17, 2019, 9:14 AM IST
சூப்பர் டூப்பர் வீடியோ - கவர்ச்சியில் அதிரடி காட்டும் இந்துஜா... வறுத்தெடுக்கும் ரசிகர்கள்
சூப்பர் டூப்பர்
news18
Updated: September 17, 2019, 9:14 AM IST
துருவா, இந்துஜா நடித்துள்ள சூப்பர் டூப்பர் படத்தில் இருந்து ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகியுள்ளது.

அருண் கார்த்திக் இயக்கத்தில் துருவா, இந்துஜா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் சூப்பர் டூப்பர். வரும் செப்டம்பர் 20-ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. வீடியோ பாடல், ஸ்னீக் பீக் விடியோக்களை வெளியீட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறது. சூப்பர் டூப்பர் படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக படத்தில் இடம்பெற்ற ஜில் ஜில் ராணி என்ற குத்துப்பாட்டை படக்குழு வெளியிட்டுருந்தது. இந்த பாடலில் கவர்ச்சியாக ஆட்டம் போட்டுள்ளார் நடிகை இந்துஜா. இந்த பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்த போதும் குடும்பப்பாங்கான கதாப்பாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்திருந்த இந்துஜா கவர்ச்சியாக நடனமாடியது விமர்சனங்களுக்கு ஆளானது.
இந்நிலையில் தற்போது படத்தில் இருந்து ஸ்னீக் பீக் விடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவிலும் நடிகை இந்துஜா கவர்ச்சியாக நடித்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஏன் இப்படி நடிக்கிறீர்கள் என்று இந்துஜாவை கேள்வி கேட்டு வருகின்றனர்.Loading...

நடிகை இந்துஜா தற்போது விஜய்யின் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முன்னதாக அர்யா நடிப்பில் வெளியான் மகாமுனி படத்திலும் இவரது நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது

Also watch

First published: September 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...