Indhuja: தடுப்பூசி போட்டுக் கொண்ட நடிகை இந்துஜா!

நடிகை இந்துஜா

விஜய்யின் ‘பிகில்’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்துஜா.

  • Share this:
    நடிகை இந்துஜா இன்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

    தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் இந்துஜாவும் ஒருவர். சிறு வயதில் இருந்தே நடிப்பு மீது அதிக ஆர்வம் கொண்ட இவர், குறும்படங்களில் நடித்து அதன் மூலம் வெள்ளித்திரையில் தோன்றினார். 2017-ஆம் ஆண்டு வெளி வந்த ’மேயாத மான்’ என்ற திரைப் படத்தில் வைபவுக்கு தங்கையாக நடித்து பலரது பாராட்டுகளைப் பெற்றிருந்தார். இதனைத் தொடர்ந்து ‘60 வயது மாநிறம்’, ’மெர்குரி’, ’பில்லா பாண்டி’, ’பூமராங்’, ’மகாமுனி’, ’சூப்பர் டூப்பர்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.



    குறிப்பாக விஜய்யின் ‘பிகில்’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்துஜா. அதோடு நயன்தாரா நடித்திருந்த ‘மூக்குத்தி அம்மன்’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது அவர் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி போட்டு, அந்த படங்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதோடு அனைவரையும் தடுப்பூசி போடுமாறும் கேட்டுக்கொண்டார். COVID-19 தடுப்பூசி இயக்கம் வேகமெடுத்து வருவதால், 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் அதிக அளவில் தடுப்பூசி போட்டுக்கொள்கிறார்கள். திரைப்படத்துறையை சேர்ந்த சில பிரபலங்களும், கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.

    தவிர, இந்த பொது முடக்கத்தைப் பயன்படுத்தி, இந்துஜா தனது உடல் எடையைக் கொஞ்சம் குறைத்துள்ளார். அதோடு ஏ.செந்தில் குமார் இயக்கும் 'காக்கி' படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். தற்போது அதன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: