‘வலிமை’ படத்தில் அஜித்துடன் நடிக்கிறாரா ஹூமா குரேஷி?

‘வலிமை’ படத்தில் அஜித்துடன் நடிக்கிறாரா ஹூமா குரேஷி?
நடிகை ஹியூமா குரோஷி
  • Share this:
‘வலிமை’ படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை ஹீமா குரேஷி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து அஜித்தின் 60-வது படமாக உருவாகி வருகிறது வலிமை. இந்தப் படத்திலும் அஜித் - எச். வினோத் - போனி கபூர் கூட்டணி தொடர்கிறது.

நடிகர் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது. படப்பிடிப்பு மற்றும் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்த தகவலை வெளியிடாமல் ரகசியம் காத்து வருகிறது படக்குழு.


இந்நிலையில் நடிகர் பிரசன்னா இந்தப் படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அவர் இந்தப் படத்தில் தான் நடிக்கவில்லை என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை யாமி கவுதம் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது காலா படத்தில் நடித்த நடிகை ஹியூமா குரோஷி வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இதனிடையே தனது ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருக்கும் ஹியூமா குரோஷி, “உமாங் போலீஸ்ஷோவில் இருந்திருக்க வேண்டும் ஆனால் சென்னையில் படப்பிடிப்பிற்காக வந்துள்ளேன்” என்று கூறியுள்ளார். இந்த ட்விட்டர் பதிவைப் பார்த்த ரசிகர்கள் பலரும் நடிகை ஹூமா குரேஷி சென்னை வந்திருப்பது அஜித்தின் வலிமை படத்தில் நடிப்பதற்காகத் தான் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். படக்குழு இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.


மேலும் படிக்க: ஆபாச ட்வீட்கள்... அஜித் இதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்... யுத்தத்தில் கஸ்தூரி...!
First published: January 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading