Home /News /entertainment /

ஹன்சிகாவின் நாயகி மைய திரைப்படம் - தயாரிப்பாளர் யார் தெரியுமா?

ஹன்சிகாவின் நாயகி மைய திரைப்படம் - தயாரிப்பாளர் யார் தெரியுமா?

ஹன்சிகா

ஹன்சிகா

ஹன்சிகா சமீபத்தில் எந்த முன்னணி ஹீரோவுடன் தமிழில் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக அவர் நடிப்பில் தமிழில் தற்போது எந்த படமும் இல்லை.

  • News18
  • Last Updated :
நாயகி மைய திரைப்படங்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் அதிக அளவில் எடுக்கப்படுகின்றன. நயன்தாரா, அனுஷ்கா, தமன்னா போன்ற முன்னணி நடிகைகளை வைத்து மட்டுமல்லாமல் வரலஷ்மி போன்ற குணச்சித்திர, வில்லி வேடங்களில் நடிக்கும் நடிகைகளை வைத்தும் நாயகி மைய திரைப்படங்களை எடுக்கின்றனர். ஓடிடி வந்த பிறகு நாயகி மைய திரைப்படங்களுக்கு கூடுதல் மவுசு கிடைத்துள்ளது.

ஹன்சிகா ஏற்கனவே மஹா என்ற நாயகி மைய திரைப்படத்தில் நடித்துள்ளார். இது அவரது 50வது திரைப்படம். சிம்பு இதில் கவுரவ வேடத்தில் தோன்றுகிறார். படம் முடிந்ததும் வியாபாரம் ஆகாமல் பல மாதங்களாக பெட்டிக்குள் உள்ளது. இந்நிலையில் மேலும் ஒரு நாயகி மைய திரைப்படத்தில் ஹன்சிகா நடிக்கிறார்.

ஹன்சிகா சமீபத்தில் எந்த முன்னணி ஹீரோவுடன் தமிழில் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக அவர் நடிப்பில் தமிழில் தற்போது எந்த படமும் இல்லை. இந்நிலையில் துணிந்து ஹன்சிகாவை ஹீரோயினாக்கியிருக்கிறார் ஒரு தயாரிப்பாளர். இவர் வேறு யாருமில்லை சிம்பு ஹன்சிகா நடித்த வாலு படத்தை இயக்கிய விஜய் சந்தர். இவர் விக்ரம் நடித்த ஸ்கெட்ச், விஜய் சேதுபதி நடித்த சங்கத்தமிழன் ஆகிய படங்களையும் இயக்கியவர். இந்தப் படங்களுக்குப் பிறகு காணாமல் போனவர் தற்போது தயாரிப்பாளர் அவதாரத்துடன் மீண்டும் வந்துள்ளார்.

படம் இயக்க வாய்ப்பு கிடைக்காததால் தயாரிப்பாளர் ஆவது கோடம்பாக்கத்தில் சகஜமாக நடக்கும் விஷயம். ஆனால் விஜய் சந்தர் அப்படியான வறட்சி காரணமாக தயாரிப்பாளராகவில்லை என்கிறார். தனது தயாரிப்பில் பிறருக்கு வாய்ப்பு கொடுக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதன் முதல் கட்டமாக ஹன்சிகா நடிப்பில் நாயகி மைய திரைப்படம் ஒன்றை தயாரிக்கிறார்.

Also read... ஆக்சன் படத்திற்காக மீண்டும் தனுஷூடன் ஒன்றிணையும் ஆனந்த் எல். ராய்!
இந்த படத்தை கேஎஸ் ரவிக்குமாரிடம் பல வருடங்களாக உதவி இயக்குநராக இருந்த சரவணன் இயக்குகிறார். கே.எஸ்.ரவிக்குமார் தயாரித்து நடித்திருக்கும் கூகுள் குட்டப்பா திரைப்படத்தை சபரி என்பவருடன் இணைந்து சரவணன் இயக்கியுள்ளார். விஜய் சந்தர் தயாரிப்பில் ஹன்சிகா நடிக்கும் நாயகி மைய திரைப்படத்தை சரவணன் தனியாக இயக்க உள்ளார். ஹன்சிகாவுடன் நடிக்கும் பிற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்து விரைவில் அறிவிக்க உள்ளனர். அடுத்த மாதம் படப்பிடிப்புக்கு கிளம்ப திட்டமிட்டுள்ளதாக விஜய் சந்தர் கூறியுள்ளார்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actress Hansika

அடுத்த செய்தி