ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சென்னை காளிகாம்பாள் கோயிலில் நடிகை ஹன்சிகா சிறப்பு தரிசனம்…

சென்னை காளிகாம்பாள் கோயிலில் நடிகை ஹன்சிகா சிறப்பு தரிசனம்…

நடிகை ஹன்சிகா

நடிகை ஹன்சிகா

சோஹேல் கதூரியா என்பவரை டிசம்பர் 4 ஆம் தேதி திருமணம் செய்துக்கொள்ள உள்ளார். இவர் ஹன்சிகாவுடன் நீண்ட நாள் நண்பரும் பிஸ்னஸ் பார்ட்னரும் ஆவார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    ஹன்சிகா நடிக்கவுள்ள புதிய படத்தின் ஷூட்டிங் நாளை தொடங்கும் நிலையில், இன்று அவர் சென்னை காளிகாம்பாள் கோயிலில் சிறப்பு தரிசனம் செய்தார்.

    தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் ஹன்சிகா. இவர் விஜய், சிம்பு, சூர்யா, விஷால், சிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின் உட்பட பல்வேறு முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.

    ஒட்டுமொத்தமாக 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஹன்சிகாவுக்கு, மிகப் பெரிய அளவில் ரசிகர்கள் உள்ளனர். தற்போது தமிழில் 4 படம், தெலுங்கில் 2 படம் என அவர் பிசியாக உள்ளார். நடிகை ஹன்சிகாவிரைவில் சோஹேல் கதூரியா என்பவரை டிசம்பர் 4 ஆம் தேதி திருமணம் செய்துக்கொள்ள உள்ளார்.

    ஊர்வலத்தில் குத்தாட்டம் போட்ட விஜய் ஆண்டனி… வைரலாகும் வீடியோ

    சோஹேல் கதூரியா ஹன்சிகாவுடன் நீண்ட நாள் நண்பரும் பிஸ்னஸ் பார்ட்னரும் ஆவார். திருமணத்தையொட்டி அதற்கான ஏற்பாடுகள் ஒருபக்கம் நடிந்து வருகின்றன.

    மனைவி துர்கா கேட்டதற்கு ஷாக்கான முதல்வர் ஸ்டாலின்.. மகன் உதயநிதி சொன்ன கலகல தகவல்!

    அதே நேரம் ஹன்சிகா நடிக்கவுள்ள புதிய படத்தின் ஷூட்டிங் நாளை தொடங்குகிறது. இந்த படத்தை கண்ணன் இயக்குகிறார். இதையொட்டி, சென்னை காளிகாம்பாள் கோயிலில் ஹன்சிகா இன்று சிறப்பு தரிசனம் மேற்கொண்டார். அவருடன் இயக்குனர் கண்ணனும் சிறப்பு தரிசனத்தில் பங்கேற்றார்.

     

    ஹன்சிகா கடைசியாக 'மஹா' என்ற பழிவாங்கும் த்ரில்லர் படத்தில் நடித்தார். இது பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அவர் நடித்துள்ள 'கார்டியன்' என்ற திகில் படம் விரைவில் வெளியாகவுள்ளது.

    இது தவிர, டிஸ்னி+ ஹாட்ஸ்டாருக்காக ராஜேஷ் இயக்கும் 'மை3' படத்தின் மூலம் ஹன்சிகா, டிஜிட்டலிலும் அறிமுகமாகிறார். முகென் ராவ், சாந்தனு பாக்யராஜ், ஜனனி ஐயர், ஆஷ்னா ஸவேரி மற்றும் சுப்பு பஞ்சு ஆகியோர் இணைந்து நடிக்கும் இதில் ஹன்சிகா, ரோபோவாக நடிப்பதாக கூறப்படுகிறது.

    Published by:Musthak
    First published:

    Tags: Actress Hansika