ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

டிசம்பரில் திருமணம்.. பிஸ்னஸ் பார்ட்னரை கரம் பிடிக்கும் ஹன்சிகா.!

டிசம்பரில் திருமணம்.. பிஸ்னஸ் பார்ட்னரை கரம் பிடிக்கும் ஹன்சிகா.!

ஹன்சிகா மோத்வானி

ஹன்சிகா மோத்வானி

மாப்பிள்ளை யார் என தெரிந்து கொள்ளும் ஆர்வம் ஹன்சிகா ரசிகர்கள் மத்தியில் அதிகம் காணப்பட்ட நிலையில், அவர் யார் என்ற விபரம் தற்போது வெளிவந்துள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தனது நெருங்கிய நண்பர் மற்றும் பிஸ்னஸ் பார்ட்னரை நடிகை ஹன்சிகா திருமணம் முடிக்கவுள்ளார். அவரது திருமண தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது.

  தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் ஹன்சிகா. இவர் விஜய், சிம்பு, சூர்யா, விஷால், சிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின் உட்பட பல்வேறு முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக இந்தி சினிமாவில் ஹன்சிகா அறிமுகம் ஆகியிருந்தார்.

  ஒட்டுமொத்தமாக 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஹன்சிகாவுக்கு, மிகப் பெரிய அளவில் ரசிகர்கள் உள்ளனர். தற்போது தமிழில் 4 படம், தெலுங்கில் 2 படம் என அவர் பிசியாக உள்ளார். இந்தநிலையில் ஹன்சிகாவுக்கு டிசம்பர் மாதம் 4ஆம் தேதி திருமணம் நடக்கவிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

  Vishal: உங்களுக்கு தலை வணங்குகிறேன்... மோடிக்கு நன்றிக்கு சொன்ன விஷால்!

  மாப்பிள்ளை யார் என தெரிந்து கொள்ளும் ஆர்வம் ஹன்சிகா ரசிகர்கள் மத்தியில் அதிகம் காணப்பட்ட நிலையில், அவர் யார் என்ற விபரம் தற்போது வெளிவந்துள்ளது. ஹன்சிகாவை திருமணம் செய்யப் போகிறவர் அவரது நீண்ட நாள் பிஸ்னஸ் பார்ட்னரும் நண்பருமான சொஹைல் கதூரியா என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

  இந்த திருமணம் புகழ்பெற்ற ஜெய்ப்பூர் அரண்மனையில் நடைபெற உள்ளது. இதையொட்டி 450 ஆண்டுகள் பழமையான ஜெய்ப்பூர் கோட்டை மற்றும் அரண்மனை புதுப்பிக்கப்பட்டு, தயாராகி வருகிறது. ஆடம்பர முறையில் அதிக பொருட்செலவில் இந்த திருமணம் நடைபெறவிருக்கிறது. இதில் பங்கேற்க உள்ள விருந்தினர்களுக்கு ஜெய்ப்பூர் அரண்மனைகள் தயார் செய்யப்படுகின்றன.

  Varisu: விஜய் குரலில் முதல் பாடல்.. இந்த வாரம் முழுக்க 'வாரிசு' அப்டேட்.. ரசிகர்கள் ஹேப்பி!

  திருமணத்திற்கு பின்னரும் ஹன்சிகா தொடர்ந்து படங்களில் நடிப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை உறுதிப்படுத்தும் விதமாக தென்னிந்திய படங்களில் சிலவற்றில் ஏற்கனவே ஹன்சிகா ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.

  கடந்த 2013-ல் ஹன்சிகாவையும், சிம்புவையும் இணைத்து செய்திகள் வெளிவந்தன. இருவரும் சில ஆண்டுகள் டேட்டிங் செய்த நிலையில், அடுத்தகட்டமாக திருமணத்திற்கு நகராமல் சிம்பு - ஹன்சிகா ஜோடி பரஸ்பரம் பிரிந்தது. இந்தநிலையில் டிசம்பர் மாதம் ஹன்சிகாவுக்கு திருமணம் நடைபெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

  Published by:Musthak
  First published:

  Tags: Actress Hansika