ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

இவர்தான் மாப்பிள்ளை.. பாரிஸில் காதலரை அறிமுகம் செய்த ஹன்சிகா.. விரைவில் திருமணம்!

இவர்தான் மாப்பிள்ளை.. பாரிஸில் காதலரை அறிமுகம் செய்த ஹன்சிகா.. விரைவில் திருமணம்!

நடிகை ஹன்சிகா

நடிகை ஹன்சிகா

Actress Hansika Motwani | தனது நெருங்கிய நண்பர் மற்றும் பிஸ்னஸ் பார்ட்னரை நடிகை ஹன்சிகா திருமணம் செய்யவுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

நடிகை ஹன்சிகா தன்னுடைய காதலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் விஜய், தனுஷ், சிம்பு,  ஜெயம்ரவி உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்தவர் ஹன்சிகா. இவர் நடிகர் சிம்புவை காதலித்தார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். அதை நடிப்பு, சமூக சேவை ஆகியவற்றில் ஹன்சிகா கவனம் செலுத்தி வந்தார்.

கடந்த மூன்று ஆண்டுகளாக எந்த படத்திலும் நடிக்காமல் இருந்த அவர், தற்போது இணைய தொடர் மற்றும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் தொழில் அதிபர் ஒருவரை காதலிக்கிறார், அவரை விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளார் என தகவல்கள் வெளியாகின. அதை தற்போது அதிகாரப்பூர்வமாக ஹன்சிகா அறிவித்துள்ளார். அதுவும் பாரிஸ் நாட்டிற்கு குடும்பத்துடன் சுற்றுள்ள சென்ற போது Sohael Khaturiya என்பவர் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு Propose செய்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் love and Forever love என பதிவிட்டுள்ளார்.

தனது நெருங்கிய நண்பர் மற்றும் பிஸ்னஸ் பார்ட்னரை நடிகை ஹன்சிகா திருமணம் முடிக்கவுள்ளார். அவரது திருமண தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஹன்சிகாவுக்கு, மிகப் பெரிய அளவில் ரசிகர்கள் உள்ளனர். தற்போது தமிழில் 4 படம், தெலுங்கில் 2 படம் என அவர் பிசியாக உள்ளார். இந்தநிலையில் ஹன்சிகாவுக்கு டிசம்பர் மாதம் 4ஆம் தேதி திருமணம் நடக்கவிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஹன்சிகாவை திருமணம் செய்யப் போகிறவர் அவரது நீண்ட நாள் பிஸ்னஸ் பார்ட்னரும் நண்பருமான சொஹைல் கதூரியா என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த திருமணம் புகழ்பெற்ற ஜெய்ப்பூர் அரண்மனையில் நடைபெற உள்ளது. இதையொட்டி 450 ஆண்டுகள் பழமையான ஜெய்ப்பூர் கோட்டை மற்றும் அரண்மனை புதுப்பிக்கப்பட்டு, தயாராகி வருகிறது. ஆடம்பர முறையில் அதிக பொருட்செலவில் இந்த திருமணம் நடைபெறவிருக்கிறது. இதில் பங்கேற்க உள்ள விருந்தினர்களுக்கு ஜெய்ப்பூர் அரண்மனைகள் தயார் செய்யப்படுகின்றன.

உற்சாக நடைபோட்ட ரஜினி.. ஓடிவந்து வரவேற்ற அமைச்சர்.. பெங்களூரு சென்ற சூப்பர் ஸ்டார்!

திருமணத்திற்கு பின்னரும் ஹன்சிகா தொடர்ந்து படங்களில் நடிப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை உறுதிப்படுத்தும் விதமாக தென்னிந்திய படங்களில் சிலவற்றில் ஏற்கனவே ஹன்சிகா ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.


Published by:Srilekha A
First published:

Tags: Actress Hansika, Kollywood, Tamil Cinema