முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / 'இதுதான் கல்யாண வாழ்க்கை.. மோதிரம்தான் வித்தியாசம்' - சென்னை வந்த ஹன்சிகா பளீர் பேச்சு!

'இதுதான் கல்யாண வாழ்க்கை.. மோதிரம்தான் வித்தியாசம்' - சென்னை வந்த ஹன்சிகா பளீர் பேச்சு!

ஹன்சிகா

ஹன்சிகா

விமான நிலையத்தில் நடிகை ஹான்சிகாவை ரசிகர், ரசிகைகள் உற்சாகமாக வரவேற்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

மீண்டும் நடிக்க வந்தது தாய் வீட்டிற்கு மகள் வருவதை போல் உணர்கிறேன் என நடிகை ஹன்சிகா பேட்டியளித்துள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல நடிகை ஹன்சிகாவுக்கும், தொழிலதிபர் சோஹைல் கதூரியாவுக்கும் கடந்த டிசம்பர் மாதம் 4-ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின் ஒப்புக்கொண்ட படங்களில் நடிக்காமல் இருந்த நடிகை ஹன்சிகா, இன்று முதல் நடிக்க முடிவு செய்தார். இதற்காக மும்பையில் இருந்து விமானம் முலம் சென்னை வந்தார்.

விமான நிலையத்தில் நடிகை ஹான்சிகாவை ரசிகர், ரசிகைகள் உற்சாகமாக வரவேற்றனர். மாலை அணிவித்தும் ரோஜா பூ தந்தும் வரவேற்றனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஹன்சிகா, ’தாய் வீட்டிற்கு மகள் வரும் போது எப்படி இருக்குமோ அதுபோல் உணர்கிறேன். ரொம்ப சந்தோசமாக இருக்கிறேன்.

நந்தகோபால் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது. இந்த ஆண்டு 7 படங்கள் வர போகிறது. இந்தாண்டு லக்கியானதாக உள்ளது. சென்னையில் ஒரு மாத படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள உள்ளேன். கல்யாண வாழ்க்கை மிகவும் நல்ல இருக்கிறது. திருமண வாழ்க்கையை அனுபவிக்கிறேன். இன்றைய கால சமுதாயமாக உள்ளதால் எல்லாரும் சமம். சினிமா படப்பிடிப்புக்காக வந்து உள்ளேன். கல்யாண வாழ்க்கைக்கு பின் மோதிரம் தான் மாறி உள்ளது’ எனக் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Hansika