ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

இளம் நடிகருடன் இணைந்து நடிக்கும் ஹன்சிகா

இளம் நடிகருடன் இணைந்து நடிக்கும் ஹன்சிகா

ஹன்சிகா, சிரீஷ்

ஹன்சிகா, சிரீஷ்

தமிழ் சினிமாவில் விஜய் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஹன்சிகா நாயகியாக நடித்திருக்கிறார். இந்த நிலையில் இளம் நடிகருடன் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகை ஹன்சிகா இளம் நடிகர் சிரீஷ் உடன் இணைந்து நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் ஹன்சிகா. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக எந்த படங்களிலும் நடிக்காமல் தவிர்த்து வந்தார். இவர், நடித்த மகா திரைப்படமும் நீண்ட இடைவேளைக்குப் பிறகு சமீபத்தில் வெளியானது. ஆனால் அந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இந்த நிலையில் ஹன்சிகா தற்போது மெட்ரோ திரைப்படத்தின் நாயகன் சிரீஷ் நடிக்கும் புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அந்த திரைப்படத்தை ஜெயம் கொண்டான்,  கண்டேன் காதலை உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆர்.கண்ணன் இயக்குகிறார். இதற்கான முதற்கட்ட பணிகள் நிறைவடைந்து படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

Also read... விதவிதமாய் வித்தியாசமாய்.! இதுதான் பிக்பாஸ் வீடா? இணையத்தில் வைரலாகும் போட்டோஸ்!

குறிப்பாக, அடுத்த வாரம் அந்த படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது.  தமிழ் சினிமாவில் விஜய் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஹன்சிகா நாயகியாக நடித்திருக்கிறார். இந்த நிலையில் இளம் நடிகருடன் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actress Hansika