முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / சிவகார்த்திகேயனுக்கு உதவிய ஹன்சிகா... நடிகர் ஆரி பகிர்ந்த விஷயம்!

சிவகார்த்திகேயனுக்கு உதவிய ஹன்சிகா... நடிகர் ஆரி பகிர்ந்த விஷயம்!

சிவகார்த்திகேயன் - ஹன்சிகா

சிவகார்த்திகேயன் - ஹன்சிகா

சிவகார்த்திகேயன் திரைப்படத்தில் நடித்து அவருக்கு நடிகை ஹன்சிகா உதவி செய்துள்ளார் என நெடுஞ்சாலை திரைப்படத்தின் நாயகன் ஆரி கூறியுள்ளார். 

  • Last Updated :

சிவகார்த்திகேயன் திரைப்படத்தில் நடித்து ஹன்சிகா அவருக்கு உதவி செய்துள்ளார் என நடிகர் ஆரி கூறியுள்ளார்.

ஹன்சிகா நடித்துள்ள மஹா திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் நடிகர் ஆரி கலந்து கொண்டு பேசினார். அதில் ”ஹன்சிகா நடித்துள்ள இந்த திரைப்படத்தில் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்து படத்திற்கு உதவி செய்துள்ளார். சிம்புவைப்போல் ஹன்சிக்காவும் இரண்டு படங்களில் நடித்துக்கொடுத்துள்ளார். மார்க்கெட் உச்சத்தில் இருந்தபோது நாம் நடிக்கும் படம் நம்மளுக்கானது என்று நினைக்காமல், தன் புகழை வளர்ந்து வருபவர்களுக்கு கொடுத்து உதவியுள்ளார். ஆனால் அது அவருக்கு தெரியுமா என்று தெரியவில்லை.

தி கிரே மேன் படத்திலிருந்து வெளியானது தனுஷின் மாஸ் சண்டைக்காட்சி!

அதில் ஒன்று சிவகார்த்திகேயனின் மான் கராத்தே. அந்த சமயத்தில் நடிகர் சிவா வளர்ந்து வரும் நடிகராக இருந்தார். அப்போது பல ஹீரோயின்கள் அவருடன் நடிக்க மறுத்தனர். ஆனால் மான் கராத்தே படத்தில் நடிக்க ஹன்சிகாவிடம் கேட்டபோது, அவர் மறுக்காமல் அந்த திரைப்படத்தில் நடித்துக் கொடுத்தார்.  அதேபோல் அறிமுக நடிகர் என்ற எண்ணம் இல்லாமல், உதயநிதி திரைப்படத்தில் நடித்துக் கொடுத்துள்ளார். அந்த இரண்டு நடிகர்களும் இன்று முன்னணி நடிகர்களாக உள்ளனர்” என ஆரி கூறினார்.

actress hansika helps sivakarthikeyan shared by bigg boss aari sivakarthikeyan hanshika maan larate movie
மேடையில் பேசிய நடிகர் ஆரி

அதேபோல் தற்போது ஹன்சிகாவுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறேன். அந்தப் படத்தில் சிறப்பாக நடித்துள்ளார். அதற்கு Award கிடைக்கும் என்று கூறினேன். அதற்கு அவர், எனக்கு Award-வோடு Reward- ம் வேண்டும் என கூறினார். அதனால்தான் ஹன்சிகா வெற்றிகரமான கமர்ஷியல் நடிகையாக இருக்கிறார் எனவும் பாராட்டினார். மஹா படத்தில் ஹன்சிகா ஒரு குழந்தைக்கு தாய்யாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Actor Aari, Actress Hansika, Kollywood, Sivakarthikeyan, Tamil Cinema