Gouri Kishan: ’எனக்கும் பள்ளியில் இப்படி நடந்தது’ அதிர்ச்சி கிளப்பிய கெளரி கிஷன்

கெளரி கிஷன்

பள்ளியில் படித்தபோது ஆசிரியர்கள் சிலர், மாணவ - மாணவிகளை அசிங்கமாக பேசுவது, சாதியை வைத்து பேசுவது, மிரட்டுவது, உடல் அமைப்பை கிண்டல் செய்வது, கேரக்டரை கேவலப்படுத்துவது உள்ளிட்ட செயல்களில் ஆசிரியர்கள் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார்.

  • Share this:
    பள்ளி பருவத்தில் தானும் கசப்பான விஷயங்களை அனுபவித்ததாக நடிகை கெளரி கிஷன் தெரிவித்துள்ளார்.

    சென்னை பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளிடம் ஆன்லைன் வகுப்பின் போது பாலியல் தொடர்பான அத்துமீறலில் ஈடுபட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து 40-க்கும் மேற்பட்ட மாணவிகள் ராஜகோபாலன் மீது புகாரளித்துள்ளனர். தற்போது இந்த விவகாரம் குறித்து திரையுலக பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், 96, மாஸ்டர், கர்ணன் போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகை கவுரி கிஷன் தான் அடையாறு பள்ளியில் படித்தபோது எதிர்கொண்ட கசப்பான அனுபவங்களை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கும் அவர், பள்ளியில் படித்தபோது ஆசிரியர்கள் சிலர், மாணவ - மாணவிகளை அசிங்கமாக பேசுவது, சாதியை வைத்து பேசுவது, மிரட்டுவது, உடல் அமைப்பை கிண்டல் செய்வது, கேரக்டரை கேவலப்படுத்துவது, ஆதாரமில்லா குற்றச்சாட்டுகளை மாணவ-மாணவியர் மீது சுமத்துவது போன்ற கொடுமைகளை தான் மட்டுமல்லாது தன்னுடன் படித்த அனைவரும் எதிர்கொண்டதாக கெளரி கூறியுள்ளார்.

    மேலும், அப்பள்ளியில் தற்போது படிக்கும் மாணவிகளும் இது போன்ற பிரச்சனைகளை அனுபவித்தால் தயங்காமல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ள அவர், உங்களின் பெயர்களை வெளியே சொல்லாமல் பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வழி செய்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: