திடீர் மரணத்தால் சோகத்தில் ஆழ்ந்த தேவயானி குடும்பம்!

திடீர் மரணத்தால் சோகத்தில் ஆழ்ந்த தேவயானி குடும்பம்!
தேவயானி
  • News18
  • Last Updated: September 8, 2019, 3:46 PM IST
  • Share this:
நடிகை தேவயானியின் தாயார் லட்சுமி ஜெயதேவ் இன்று காலை காலமானார்.

தமிழ் சினிமாவில் அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து புகழ்பெற்றவர் நடிகை தேவயானி. இயக்குநர் ராஜகுமாரனைத் திருமணம் செய்து கொண்ட இவர் தற்போதும் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். திரைப்படங்கள் மட்டுமின்றி தொலைக்காட்சித் தொடர்களிலும் தேவயானி நடித்தார். இவரைப் போலவே இவரது சகோதரர் நகுலும் திரையுலகில் நாயகனாக நடித்துவருகிறார்.

இந்நிலையில் நடிகை தேவயானியின் தாயார் லட்சுமி ஜெயதேவ் இன்று காலை மரணமடைந்துள்ளார். அவரது மரணம் தேவயானி குடும்பத்தாரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மரணமடைந்த தேவயானியின் தாயார் லட்சுமி நாகர்கோவிலை பூர்வீகமாகக் கொண்டவர். கர்நாடக மாநிலம் மைசூரைச் சேர்ந்த ஜெயதேவை திருமணம் செய்து கொண்ட லட்சுமிக்கு தேவயானி, நகுல், மையூர் ஆகிய 3 பிள்ளைகள் உள்ளனர்.

இவர்களில் நகுல், தேவயானி இருவரும் திரைத்துறையில் உள்ளனர். சென்னையில் தனது பிள்ளைகளுடன் வசித்து வந்து லட்சுமி ஜெயதேவ் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று காலை லட்சுமி ஜெயதேவ் மரணமடைந்துள்ளார். கடந்த ஆண்டு தேவயானியின் தந்தை வயதுமூப்பின் காரணமாக உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது.

Loading...

வீடியோ பார்க்க: தந்தை நண்பரின் மகளுக்கு பாலியல் வலைவீசிய இளைஞர் சிக்கியது எப்படி?

First published: September 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...