HOME»NEWS»ENTERTAINMENT»cinema actress devayani daughter picture goes viral scs

Devayani: தேவயானிக்கு இவ்வளவு பெரிய மகளா? வைரலாகும் படம்

நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி நடிக்கும் தெலுங்கு திரைப்படமான 'லவ் ஸ்டோரி'யில் நடித்து வருகிறார் தேவயானி.

Devayani: தேவயானிக்கு இவ்வளவு பெரிய மகளா? வைரலாகும் படம்
தேவயானி
  • Share this:

நடிகை தேவயானி 1994 ஆம் ஆண்டில் கே.எஸ்.அதியமான் இயக்கிய ‘தொட்டா சிணுங்கி’ படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். கார்த்திக். ரகுவரன், ரேவதி ஆகியோர் நடித்திருந்த அந்தப் படத்தில் அல்ட்ரா மார்டன் பெண்ணாக நடித்திருத்திருந்தார் தேவயானி. அதன் பிறகு இந்தி, மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் வெளியான அவரது படங்களிலும் மார்டன் பெண்ணாகவே காட்சியளித்தார்.

இருப்பினும், 1996-ல், வெளியான அஜித்தின் ’காதல் கோட்டை’ படம் தேவயானிக்கு மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதில் கடிதங்கள் மூலமாக மட்டுமே ஹீரோவை காதலிக்கும் சிறிய நகரப் பெண்ணாக நடித்தார். பின்னாளில் முன்னணி நடிகராக மாறிய அஜித்துக்கும் இந்தப் படம் முக்கியமானதாக இருந்தது.

Devayani Daughter Images goes viral
குடும்பத்துடன் தேவயானி




பின்னர் முக்கியத்துவம் வாய்ந்த பெண் கதாபாத்திரங்களில் நடித்தார் தேவயானி. 2001-ஆம் ஆண்டு ராஜகுமாரனைக் காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதியினருக்கு இனியா மற்றும் பிரியங்கா என இரு மகள்கள் உள்ளனர். தற்போது நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி நடிக்கும் தெலுங்கு திரைப்படமான 'லவ் ஸ்டோரி'யில் நடித்து வருகிறார் தேவயானி.

இதற்கிடையில் தேவயானி, ராஜகுமாரன் மற்றும் அவர்களது மகள் ஒரு விழாவில் கலந்துக் கொண்டுள்ளனர். அச்சு அசல் தேவயானி போலவே இருக்கிறார் அவரது மகள். அந்தப் படம் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published: