தாயாருக்கு கொரோனா பாதிப்பு: பிரதமர் மற்றும் முதலமைச்சரிடம் உதவி கேட்ட நடிகை

தனது தாயாருக்கு கொரோனா பாதிக்கப்பட்டிருப்பதால் முதல்வர் மற்றும் பிரதமரிடம் உதவி கேட்டுள்ளார் நடிகை தீபிகா சிங்

தாயாருக்கு கொரோனா பாதிப்பு: பிரதமர் மற்றும் முதலமைச்சரிடம் உதவி கேட்ட நடிகை
நடிகை தீபிகா சிங் கோயல்
  • Share this:
பிரபல இந்தி சீரியல் நடிகை தீபிகா சிங். கூட்டுக் குடும்பத்தில் வாழ்ந்து வரும் இவரது தாயாருக்கு கொரோனா தொற்று பரவியதை அடித்து டெல்லியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தனது தாயாரின் மருத்துவ அறிக்கையை தருமாறும், அவரை வேறு மருத்துவமனைக்கு மாற்றுவதற்காக மருத்துவமனை நிர்வாகத்திடம் அறிக்கை கேட்ட தீபிகா சிங்குக்கு சரியான பதில் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து தனது ட்விட்டர் பதிவில், தனது தாயார் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், அவருக்கான மருத்துவ அறிக்கையை மருத்துவமனை தரவில்லை என்றும், தனது தந்தை வைத்திருக்கும் அறிக்கை ஒன்றையும் புகைப்படம் எடுத்து பதிவிட்டுள்ளார்.


இதை சம்பந்தப்பட்டவர்கள் படித்து தகுந்த சிகிச்சை அளிக்க உதவி செய்ய வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பிரதமர் அலுவலக ட்விட்டர் கணக்கையும் டேக் செய்துள்ளார்

இதையடுத்து டெல்லி துணை ஆணையர் அபிஷேக் சிங் தீபிகாவின் ட்வீட்டுக்கு பதிலளித்துள்ளார். அதில், தீபிகா சிங்கின் தாயாருக்கு கொரோனா வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர் தற்போது நலமடைந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் தீபிகாவின் குடும்பத்தினர் நிம்மதியடைந்துள்ளனர்மேலும் படிக்க: இளம் வயதில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சுஷாந்த் சிங் - பிரதமர் மற்றும் திரையுலகினர் இரங்கல்

மேலும் படிக்க: சுஷாந்த் சிங் மரணத்தைத் தொடர்ந்து கவனம் பெறும் அவரின் முன்னாள் பெண் மேலாளர் தற்கொலை விவகாரம்
First published: June 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading