Ex-Minister Manikandan: முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் தன்னை ஏமாற்றி விட்டதாக நடிகை சாந்தினி புகார்

மணிகண்டனுடன் சாந்தினி

அவருடன் நெருங்கி பழகியுள்ளதால் சாந்தினி கருவுற்று இருக்கிறார். இதனால் தன்னை திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என கூறியதற்கு, மணிகண்டனோ கருவை கலைக்க வைத்து, அவரை அடித்து துன்புறுத்தியுள்ளார்.

  • Share this:
    அதிமுக-வின் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் திருமணம் செய்துக் கொள்வதாகக் கூறி தன்னை ஏமாற்றிவிட்டதாக நடிகை சாந்தினி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளார்.

    சில வருடங்களுக்கு முன்பு தினகரனுடன் இணைந்து, 18 ஆதரவு எம்எல்ஏ-க்கள், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஆளுநரிடம் மனு தந்தனர். இந்த விவகாரத்தில் பதவி பறிக்கப்பட்ட எம்எல்ஏ-களில் மணிகண்டனும் ஒருவர்.

    இந்நிலையில் நாடோடி படத்தில் நடித்த நடிகை சாந்தினி தேவா, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னுடன் நெருக்கமாக பழகி வந்ததாக குறிப்பிட்டுள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக தன்னை காதலித்துவிட்டு, திருமணம் செய்துக் கொள்வதாக அவர் கூறியதாகவும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கொடுத்த புகாரில் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே அவருடன் நெருங்கி பழகியுள்ளதால் சாந்தினி கருவுற்று இருக்கிறார். இதனால் தன்னை திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என கூறியதற்கு, மணிகண்டனோ கருவை கலைக்க வைத்து, அவரை அடித்து துன்புறுத்தியுள்ளார். மேலும் திருமணம் செய்யச்சொல்லி வற்புறுத்தினால், அந்தரங்க புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று , கூலிப்படையை வைத்து மிரட்டியுள்ளார்.

    அதனால் தன்னை ஏமாற்றிய முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகை சாந்தினி தேவா, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கொடுத்துள்ள புகாரில் குறிப்பிட்டுள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: