14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட நடிகை பிந்துமாதவி - வீடியோ

நடிகை பிந்துமாதவி வசிக்கும் குடியிருப்பில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால் 14 நாட்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட நடிகை பிந்துமாதவி - வீடியோ
நடிகை பிந்து மாதவி
  • Share this:
கழுகு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் பிந்துமாதவி பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். அதைத்தொடர்ந்து அவர் நடித்த கழுகு 2 திரைப்படம் வெளியானது. இதையடுத்து மாயன், யாருக்கும் அஞ்சேல் ஆகிய படங்களில் நடித்து வந்த பிந்துமாதவி கொரோனா ஊரடங்கால் வீட்டில் முடங்கியுள்ளார்.

இந்நிலையில் தான் வசிக்கும் அப்பார்ட்மெண்டில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் அதனால் தனிமைப்பட்டிருப்பதாகவும் தனது சமூகவலைதள பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் மாநகராட்சி ஊழியர்கள் அந்தக் குடியிருப்பின் கேட்டை இழுத்து மூடி, போஸ்டர் ஒட்டும் காட்சி இடம்பெற்றுள்ளது.

குடியிருப்பில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால் அங்கு வசிக்கும் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் நடிகை பிந்து மாதவி தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: சினிமா படப்பிடிப்பு, திரையரங்குகள் திறப்புக்கு அனுமதி வேண்டும் - முதல்வருக்கு இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள்
First published: May 31, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading