முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ''எனக்கு நினைவாற்றல் குறைபாடு, பல விஷயங்களை மறந்துவிட்டேன்'' - நடிகை பானுப்பிரியா அதிர்ச்சி தகவல் - ரசிகர்கள் உருக்கம்

''எனக்கு நினைவாற்றல் குறைபாடு, பல விஷயங்களை மறந்துவிட்டேன்'' - நடிகை பானுப்பிரியா அதிர்ச்சி தகவல் - ரசிகர்கள் உருக்கம்

பானுபிரியா

பானுபிரியா

சமீபத்தில் ஒரு படப்பிடிப்பில் கலந்துகொண்டபோது வசனங்ளைக் கூட மறந்துவிட்டேன்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

80, 90களில் தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் அப்போதைய உச்ச நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்து புகழ்பெற்றவர் பானுப்பிரியா. ஹிந்தி, மலையாளம், கன்னடம் மொழிகளிலும் நடித்துள்ளார். கடைசியாக தமிழில் இவர் நடிப்பில் சில நேரங்களில் சில மனிதர்கள் என்ற படம் வெளியாகியிருந்தது.

நடிகை பானுபிரியா கடந்த 1998 ஆம் ஆண்டு ஆதர்ஷ் கவுஷல் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது உடல்நிலை குறித்து அதிர்ச்சி தகவலை பகிர்ந்துள்ளார்.

அதில் பேசிய அவர், சமீப காலமாக எனக்கு உடல்நிலை சரியில்லை. நினைவாற்றலை இழந்துவிட்டேன். கற்றுக்கொண்ட சில விஷங்களை மறந்துவிட்டேன். பின்னர் நடனத்தில் ஆர்வம் குறைந்தது. நான் வீட்டில் நடனம் கூட பயிற்சி செய்தவில்லை.

சமீபத்தில் ஒரு படப்பிடிப்பில் கலந்துகொண்டபோது வசனங்ளைக் கூட மறந்துவிட்டேன். ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டியதைக் கூட மறந்துவிடுகிறேன். என்று பேசினார். இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திவருகிறது.

First published:

Tags: Actress, Memory Loss