ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

’அதிகம் படிக்கல.. டான்ஸ்தான் எல்லாமே’ – சினிமா எண்ட்ரி குறித்து மனம் திறந்த நடிகை பானுப்ரியா!

’அதிகம் படிக்கல.. டான்ஸ்தான் எல்லாமே’ – சினிமா எண்ட்ரி குறித்து மனம் திறந்த நடிகை பானுப்ரியா!

நடிகை பானு பிரியா

நடிகை பானு பிரியா

சின்ன வயசிலேயே எனது அப்பாவும் அம்மாவும் பிரிந்து விட்டார்கள். இதனால் ஒரு மகிழ்ச்சிகரமான குடும்ப வாழ்க்கை எனக்கு ஆரம்பத்தில் அமையவில்லை

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  சின்ன வயதில் தான் நடனம் கற்றுக் கொண்டது சினிமாவில் கைகொடுத்ததாகவும், படிக்கும்போது ஹோம் ஒர்க்கை விட நடனத்திற்குத்தான் முக்கியத்துவம் அளித்ததாகவும் நடிகை பானுப்ரியா கூறியுள்ளார்.

  இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-

  சின்ன வயசில் எனக்கு இசை மீது அதிக ஆர்வம் உண்டு. அந்த காலத்தில் ரேடியோ மட்டும் தான் இருக்கும். அதில் ஒளிபரப்பாகும் பாடல்களுக்கு நான் நடனம் ஆடுவேன். என்னிடம் இசை ஞானம் இருப்பதை அப்பா அம்மா கவனித்தார்கள். இதன் பின்னர் என்னை கிளாசிக்கல் நடனத்தில் பயிற்சிபெற சேர்த்தார்கள்.

  நடன பயிற்சி பள்ளியில் நான் சேரும் போது எனக்கு ஐந்து வயது இருக்கும். இதன் பின்னர் ஆனந்த் மாஸ்டரிடம் குச்சிப்புடி நடனம் கற்றேன். காலையில் எழுந்து ரெடியான பின்னர், முதலில் நடனம் கற்றுக் கொண்ட பின்னர்தான் பள்ளிக்கு செல்ல கூடிய நிலை எனக்கு ஏற்பட்டது. மற்ற பிள்ளைகளைப் போல பள்ளி கிளம்புவதற்கு முன்பாக ஹோம்வொர்க் நான் செய்தது கிடையாது. நடனம் தான் எனக்கு முக்கியத்துவமாக அளிக்கப்பட்டது.

  நயன்தாரா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள 'கனெக்ட்' படத்தின் டீசர் வெளியீட்டு தேதி அறிவிப்பு…

  கோடம்பாக்கத்தில் உள்ள சரஸ்வதி வித்யாலயாவில் தான் நான் ஆரம்ப கல்வியை படித்தேன். நான் எட்டாம் வகுப்பு வரை மட்டும் தான் படித்தேன். அதன் பின்னர் நடிக்க வந்துவிட்டேன். பள்ளி பருவத்தில் தான் நான் மிகுந்த மகிழ்ச்சியாக இருந்திருக்கிறேன்.

  எனது அம்மா மிகவும் கண்டிப்பானவர். மிகவும் கட்டுப்பாடு, ஒழுக்கத்துடன் என்னை அவர்கள் வளர்த்தார்கள். ஒரு விதத்தில் எனக்கு அது மிகவும் பயனாக அமைந்தது. சின்ன வயசிலேயே எனது அப்பாவும் அம்மாவும் பிரிந்து விட்டார்கள். இதனால் ஒரு மகிழ்ச்சிகரமான குடும்ப வாழ்க்கை எனக்கு ஆரம்பத்தில் அமையவில்லை. வீட்டில் உள்ளவர்களுக்கு சினிமா பார்ப்பதில் அதிக ஆர்வம் உண்டு. குறிப்பாக இசை, நடனம் சார்ந்த திரைப்படங்கள் வரும்போது, அதனை திரும்பத்திரும்ப பார்ப்போம். அப்போது டிவி கிடையாது. தியேட்டர் தான் உண்டு.

  நடிகர் கிருஷ்ணா மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல்…

  இதனால் படங்களை பார்த்து பார்த்து அவற்றை நான் உள்வாங்கிக் கொண்டேன். சினிமாவில் எனக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது, நான் இளம்வயதில் கற்றுக்கொண்ட நடனம்தான். நான் படித்த போது எனக்கு முதன்மை மொழி ஆங்கிலம். இரண்டாவது மொழி தமிழாகவும் கற்றுக் கொடுக்கப்பட்டது.

  நடிகர்கள், நடிகைகள் மூலமாகத்தான் நான் சினிமாவில் நடிப்பதற்கு அதிகம் கற்றுக் கொண்டேன். நான் அதிகம் படிக்கவில்லையே என்ற வருத்தம் எனக்கு எப்போதும் உண்டு. முதலில் தமிழ் படத்தில் நடித்து அங்கீகாரம் கிடைத்த பின்னர் தான், தெலுங்கு படங்களில் நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்தன.

  நான் நடிக்க வந்த புதிதில், எனக்கு நான் எதிர்பார்க்காத கேரக்டர்கள் கொடுக்கப்பட்டன. அதுதான் எனக்கு திரைத்துறையில் அங்கீகாரம் கிடைக்க காரணமாய் அமைந்தன.

  அதாவது பலதரப்பட்ட எமோஷன்களை கொண்டுவரக்கூடிய கேரக்டர்கள் எனக்கு ஆரம்ப காலத்திலேயே கிடைத்தன. உதாரணத்திற்கு மெல்ல பேசுங்கள் படத்தில் நான் நடித்துக் கொண்டிருந்தபோது நான் எட்டாம் வகுப்பு படித்து இருந்தேன். ஆனால் அந்த படத்தில் எனக்கு டீச்சர் கேரக்டரை கொடுத்தார்கள். இந்த படத்தின் அனுபவங்களை என்னால் மறக்க முடியாது. இதனால் கிடைத்த புகழுக்கு இயக்குனர்கள் பி.வாசு மற்றும் சந்தான பாரதிக்குதான் சொந்தமாகும்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  Published by:Musthak
  First published:

  Tags: Kollywood