Home /News /entertainment /

இந்து கோயில்கள் கொள்ளையடிக்கும் கூடாரமாக மாறிவிட்டது - திருப்பதி கோயில் குறித்து வீடியோ வெளியிட்ட நடிகை

இந்து கோயில்கள் கொள்ளையடிக்கும் கூடாரமாக மாறிவிட்டது - திருப்பதி கோயில் குறித்து வீடியோ வெளியிட்ட நடிகை

அர்ச்சனா கெளதம்

அர்ச்சனா கெளதம்

"விஐபி தரிசனம் என்ற பெயரில், 10,500 ரூபாய்” வாங்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ள அர்ச்சனா கெளதம், “இந்து கோயில்கள் கொள்ளை அடிக்கும் கூடாரமாக மாறிவிட்டதாகக்” தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    கோயில்கள் கொள்ளையடிக்கும் கூடாரமாக மாறிவிட்டதாக நடிகையும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான அர்ச்சனா கெளதம் குற்றம்சாட்டியுள்ளார்.

    கூட்டம் குறையாத கோயில்களில் ஒன்றாக கருதப்படுவது திருப்பதி கோவில். இங்கு இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாட்டினரும் வந்து செல்கின்றனர். அங்கு காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரும் நடிகையுமான அர்ச்சனா கெளதம் சுவாமி தரிசனம் செய்ய சென்றபோது தனக்கு நேர்ந்த அவலத்தை ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    கடவுள் எனக்காக டன்சோவில் அனுப்பிய பரிசு நீ... மனைவி மகாலட்சுமியை புகழ்ந்த ரவீந்தர்!



    சிபாரிசு கடிதம் மூலம் திருப்பதி தேவஸ்தானத்திற்கு சென்ற அவர், தரிசன டிக்கெட் கேட்டபோது அதற்கு தேவஸ்தான ஊழியர்கள் தன்னிடம் தகாத முறையில் நடந்துக் கொண்டதாகக் கூறி அவரது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதோடு "விஐபி தரிசனம் என்ற பெயரில், 10,500 ரூபாய்” வாங்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ள அர்ச்சனா கெளதம், “இந்து கோயில்கள் கொள்ளை அடிக்கும் கூடாரமாக மாறிவிட்டன. மதத்தின் பெயரால் பெண்களிடம் அநாகரிகமாக நடந்துக் கொள்ளும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
    Published by:Shalini C
    First published:

    Tags: Tirumala Tirupati

    அடுத்த செய்தி