தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை அனுஷ்கா மறைந்த இயக்குநர் கோடி ராமகிருஷ்ணா பற்றி பேசும் போது கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.
ஈடிவியில் தொகுப்பாளர் சுமா தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் நடிகை அனுஷ்கா உள்ளிட்ட நிசப்தம் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
அப்போது நடிகை அனுஷ்காவின் திரைப்பயணம் குறித்து காணொலி ஒன்று ஒளிபரப்பப்பட்டது. மேலும் தொகுப்பாளர் கேட்ட பல சுவாரஸ்யமான கேள்விகளுக்கும் நடிகை அனுஷ்கா பதிலளித்தார்.
அப்போது தன்னைப் பற்றி ஒளிபரப்பப்பட்ட வீடியோவில் மறைந்த அருந்ததி பட இயக்குநர் கோடி ராமகிருஷ்ணாவும் இடம்பெற்றிருந்தார். அதைப்பார்த்து உணர்ச்சிவசப்பட்ட நடிகை அனுஷ்கா, இயக்குநர் கோடி ராமகிருஷ்ணா இன்னும் சில காலம் நம்முடன் இருந்திருக்கலாம் என்று கூறினார். அவர் பேசிக்கொண்டிருக்கையில் கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் விட்டு அழுதார்.
பின்னர் உடனிருந்தவர்கள் தண்ணீர் கொடுத்த அனுஷ்காவை ஆசுவாசப்படுத்திய பின்னர் இயல்பு நிலைக்குத் திரும்பினார். கோடி ராமகிருஷ்ணாவை நினைத்து அனுஷ்கா அழுததற்கு காரணம், அவர் இயக்கிய அருந்ததி படம் தான் அனுஷ்காவுக்கு அதிக புகழையும், பரிமாணத்தையும் பெற்றுத் தந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.