கிரிக்கெட் வீரருடன் காதலா?... வாய்திறந்த அனுஷ்கா ஷெட்டி!

கிரிக்கெட் வீரருடன் காதலா?... வாய்திறந்த அனுஷ்கா ஷெட்டி!
நடிகை அனுஷ்கா ஷெட்டி
  • Share this:
வட இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவரை நடிகை அனுஷ்கா காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் அதுகுறித்து அனுஷ்கா ஷெட்டி மனம் திறந்துள்ளார்.

இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான ‘ரெண்டு’ படத்தில் மாதவனுக்கு ஜோடியாக அறிமுகமான அனுஷ்கா, விஜய், அஜித் ,சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்துள்ளார். பாகுபலி படத்தில் நடித்த போது பிரபாஸ் உடன் அனுஷ்காவுக்கு காதல் ஏற்பட்டதாகவும், விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் பேசப்பட்டது.

அனுஷ்காவின் திருமணம் குறித்து பல ஆண்டுகளாக வெளியாகி வரும் தகவல் குறித்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த அனுஷ்காவின் அம்மா பர்ஃபுல்ல ஷெட்டி “எனக்கு பிரபாசை பிடிக்கும். அவரும் அனுஷ்காவும் சேர்ந்து நடித்துள்ளனர். என் மகள் அனுஷ்காவுக்கு பிரபாஸ் போன்ற மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சிதான். ஆனால் அவர்கள் இருவரும் நண்பர்கள் மட்டுமே. அவர்களுக்கு இடையே காதல் இல்லை. அதனால் அவர்கள் திருமணம் பற்றி வதந்தி பரப்புவதை நிறுத்துங்கள்” என்று கூறியிருந்தார்.
இதையடுத்து அனுஷ்கா, வட இந்திய கிரிக்கெட் வீரருடன் காதலில் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இதுகுறித்து முதல்முறையாக வாய்திறந்திருக்கும் அனுஷ்கா, இந்த செய்தியில் எந்த ஆதாரமும் கிடையாது. இதுபோன்ற வதந்திகள் பரப்பப்படுவதால் எனக்கு மன வருத்தமாக உள்ளது. எனது திருமண முடிவை எனது பெற்றோரிடம் விட்டுவிட்டேன்” என்று கூறியுள்ளார்.

அனுஷ்கா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘நிசப்தம்’. இதில் மாதவன், அஞ்சலி, ஷாலினி பாண்டே மற்றும் ஹாலிவுட் நடிகர்களும் நடித்துள்ளனர். ஹேமந்த் மதுக்கூர் இயக்கியுள்ள இந்தப் படத்தில், அனுஷ்கா காது கேளாத, வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட 5 மொழிகளில் உருவாகியிருக்கும் இத்திரைப்படம் ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வர உள்ளது.மேலும் படிக்க: இந்தியன் 2 விபத்து எதிரொலி: சிம்புவின் மாநாடு படத் தயாரிப்பாளர் செய்த புதுமுயற்சி- குவியும் பாராட்டு
First published: February 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்