Home /News /entertainment /

தன்னைவிட 8 வயது இளைய நடிகருடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் அனுஷ்கா?

தன்னைவிட 8 வயது இளைய நடிகருடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் அனுஷ்கா?

அனுஷ்கா

அனுஷ்கா

Anushka New Movie : தெலுங்கு நடிகர் நவீன் பொலிஷெட்டியுடன் இணைந்து படத்தில் நடிக்கிறார் அனுஷ்கா.

அனுஷ்காவின் புதிய பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தன்னைவிட எட்டு வயது இளைய நடிகருடன் இணைந்து நடிக்கிறார்.நயன்தாராவைப் போல் வர வேண்டிய நடிகை அனுஷ்கா. சைஸ் ஸீரோ (தமிழில் இஞ்சி இடுப்பழகி) படத்துக்காக உடல் எடையை அதிகரித்தது வம்பாகி புதிய படங்கள் எதுவும் அமையாமல் போனது.

எவ்வளவுதான் டயட்டில் எடை குறைத்தாலும் மறுபடியும் உடல் எடை ஏறிவிடுகிறது . புதிய படங்கள் எதையும் கமிட் பண்ணாத அனுஷ்கா ஒரேயொரு படத்துக்கு மட்டும் ஓகே சொல்லியுள்ளார்.

தெலுங்கில் தயாராகும் இந்தப் படத்தை மகேஷ் பாபு என்பவர் இயக்குகிறார். நாயகனாக நவீன் பொலிஷட்டி நடிக்கிறார். சமீபமாக தெலுங்கு சினிமா இவரது படங்களைத்தான் ஆச்சரியமாகப் பார்க்கிறது. நகைச்சுவை கலந்து இவர் செய்யும் வேடங்கள் பெரிய அளவில் ரசிகர்களை சென்றடைகின்றன. 2019 இல் இவர் நடித்த ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா படம் சூப்பர் ஹிட்டானது. அது தமிழில் ஏஜென்ட் கண்ணாயிரம் என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. சந்தானம் நடிக்கிறார்.

இந்த வருடம் நவீன் பொலிஷெட்டி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் ஜதி ரத்னலு. முந்தையப் படத்தைப் போலவே நகைச்சுவைக்கு முக்கியத்துவம் உள்ள இந்தப் படத்தை அனுதீப் என்பவர் இயக்கியிருந்தார். அவர்தான் சிவகார்த்திகேயனின் நேரடித் தெலுங்குப் படத்தை இயக்க உள்ளார்.

also read : நடிகை ரித்திகா சிங்கின் ஸ்டைலிஷ் போட்டோஸ்..

நவீன் பொலிஷெட்டியின் அடுத்தப் படத்தை யுவி கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது. அனுஷ்கா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அவர் ஜோடியாக நடிக்கிறாரா இல்லையா என்பதை இன்னும் அறிவிக்கவில்லை. இப்படியொரு சந்தேகம் எழ காரணம், நவீன் பொலிஷெட்டியின் வயது 32. அனுஷ்காவுக்கு 40. ஆகவே கண்டிப்பாக இருவரும் ஜோடியாக நடிக்க வாய்ப்பில்லை என்கிறார்கள்.இது சினிமா..நாம் நினைப்பதற்கு உல்டாவாகவும் நடக்க வாய்ப்புள்ளது.
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Actress Anushka

அடுத்த செய்தி