Home /News /entertainment /

அஞ்சலி நடிப்பில் புதிய படம் ஜான்சி

அஞ்சலி நடிப்பில் புதிய படம் ஜான்சி

நடிகை அஞ்சலி

நடிகை அஞ்சலி

புதிய நிறுவனத்தை நடிகர் கிருஷ்ணா  தொடங்கி அதன் சார்பில் ஜான்சியை தயாரிக்கிறார்.

நடிகை அஞ்சலி ஜான்சி என்ற நாயகி மையப் படத்தில் நடிக்கிறார். இது டிஸ்னி + ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஓடிடி தளங்கள் பெருகிய பிறகு ஓடிடி தளங்களுக்கென்றே திரைப்படங்கள் எடுக்கப்படுகின்றன. வெப் தொடர்கள் தயாராகின்றன. சினிமாவில் பிரபலமாக இருப்பதுதான் இந்த சினிமாக்கள், வெப் தொடர்கள் எடுப்பதற்கான முதல் தகுதி. கதை, கன்டென்ட் எல்லாம் இரண்டாம்பட்சம்.

நயன்தாரா நடித்த படம் என்றால் நெற்றிக்கண் போன்ற சுமாரான படத்தையும் ஓடிடி தளங்கள் பெரும் பணம் தந்து வாங்கி வெளியிடும். கௌதம் இயக்குகிறார் என்றால் எந்த ஓடிடி தளமும் வெப் தொடர் தயாரிக்கும். சரி, நம் கதைக்கு வருவோம். அஞ்சலி நடிப்பில் ஜான்சி என்ற திரைப்படம் தயாராகிறது. இதனை தீராத விளையாட்டுப் பிள்ளை, சமர், நான் சிவப்பு மனிதன் போன்ற படங்களை இயக்கிய திரு இயக்குகிறார். தயாரிப்பது நடிகர் கிருஷ்ணா.

இதையும் படிங்க.. அமீர் - பாவ்னி உறவை பற்றி பேசி சண்டையில் சிக்கிய பிரியங்கா!

ட்ரைபல் ஹார்ஸ் என்டர்டெயின்மெண்ட் என்ற புதிய நிறுவனத்தை கிருஷ்ணா  தொடங்கி அதன் சார்பில் ஜான்சியை தயாரிக்கிறார். டைட்டில் கதாபாத்திரத்தில் அஞ்சலியை ஒப்பந்தம் செய்துள்ளனர். டிஸ்னி + ஹாட் ஸ்டார் ஓடிடிக்காக இந்த திரைப்படம் தயாராகிறது.
ஓடிடி தளங்களுக்கு வாரந்தோறும் புதிய திரைப்படங்கள், வெப் தொடர்கள் தேவைப்படுகின்றன.

இதையும் படிங்க.. நிஜ சம்பவங்களை கையில் எடுக்கும் பாக்கியலட்சுமி சீரியல்! எதிர்ப்பும்.. ஆதரவும்

இதனால் திரையரங்குகளுக்காக எடுக்கப்படும் படங்களை மட்டும் நம்பினால் தேவையை பூர்த்தி செய்வது கடினம். அதனால், அந்நிறுவனங்களே கதை கேட்டு, பைனான்ஸ் செய்து வெப் தொடர்கள், திரைப்படங்கள் தயாரிக்கின்றன. சிலநேரம் பர்ஸ்ட் காப்பி அடிப்படையிலும் தயாரிக்கின்றன. இதுபோன்ற திரைப்படங்கள் வருங்காலத்தில் அதிகளவில் தயாரிக்கப்படும்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sreeja
First published:

Tags: Actress Anjali, Kollywood, OTT Release

அடுத்த செய்தி