Home /News /entertainment /

திருமணமான 5 மாதத்தில் பெண் குழந்தைக்கு தாயான அண்ணாத்த பட நடிகை

திருமணமான 5 மாதத்தில் பெண் குழந்தைக்கு தாயான அண்ணாத்த பட நடிகை

அஞ்சலி நாயர் குடும்பம்

அஞ்சலி நாயர் குடும்பம்

உதவி இயக்குனர் அஜித் ராஜுவை காதலித்து, கடந்தாண்டு பிப்ரவரியில் திருமணம் செய்து கொண்டதாக அறிவித்தார் அஞ்சலி.

    கடந்த பிப்ரவரியில் இரண்டாவது திருமணம் செய்துக் கொண்ட நடிகை அஞ்சலி நாயர் தற்போது பெண் குழந்தைக்கு தாயாகியுள்ளார்.

    இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மறுமணம் செய்து கொண்ட பிரபல நடிகை அஞ்சலி நாயர் தற்போது தனக்குக் குழந்தை பிறந்ததை அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அஞ்சலி நாயர் பல மலையாள படங்களில் நடித்துள்ளார். தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அம்மாவாக 'அண்ணாத்தே' திரைப்படத்திலும் விஜய் சேதுபதியின் 'மாமனிதன்' படத்திலும் நடித்துள்ளார்.

    திரைப்பட இயக்குநர் அனீஷ் உபாசனாவை திருமணம் செய்து கொண்ட அஞ்சலி, சில ஆண்டுகளுக்கு முன்பு அவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார். முதல் திருமணத்தில் இவருக்கு ஆவ்னி என்ற மகள் இருக்கிறார். இவர் '5 சுந்தரிகள்' படத்தில் அஞ்சலியின் மகளாக நடித்திருப்பார். இதையடுத்து உதவி இயக்குனர் அஜித் ராஜுவை காதலித்து, கடந்தாண்டு பிப்ரவரியில் திருமணம் செய்து கொண்டதாக அறிவித்தார் அஞ்சலி.



     

    அஜித்தின் AK61 படப்பிடிப்பு தளத்தில் மஞ்சு வாரியர்!



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில் தற்போது தனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக முகநூலில் அறிவித்திருக்கும் அஞ்சலி, தனது கணவர் மற்றும் மூத்த மகளுடன் இருக்கும் வளைகாப்பு புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.
    Published by:Shalini C
    First published:

    Tags: Malayalam actor

    அடுத்த செய்தி