கொரோனா முடிவுக்கு வந்தால் இப்படித்தான் கொண்டாடுவேன் - அஞ்சலி

கொரோனா முடிந்ததும் வீட்டுக்கு வெளியில் வந்து நடனமாடி கொண்டாட இருப்பதாக நடிகை அஞ்சலி தெரிவித்துள்ளார்.

கொரோனா முடிவுக்கு வந்தால் இப்படித்தான் கொண்டாடுவேன் - அஞ்சலி
நடிகை அஞ்சலி
  • Share this:
கொரோனா அச்சுறுத்தல் காலத்தில் திரைப்பட படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதனால் பெரும்பாலான திரைபிரபலங்கள் வீட்டில் இருக்கிறார்கள்.

லாக்டவுன் காலத்தில் தொடர்ச்சியாக சமூகவலைதளங்களில் இயங்கி வரும் நடிகர்கள், கொரோனா விழிப்புணர்வு தொடங்கி, சமையல் டிப்ஸ் உள்ளிட்டவற்றை வீடியோக்களாக பதிவிட்டு வருகின்றனர். அதே வேளையில் தங்களது பழைய புகைப்படங்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

நடிகை அஞ்சலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பின் முன்பு நடனமாடும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில், கொரோனா பிரச்னை முடிந்ததும் இப்படிதான் கொண்டாட நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.

 
View this post on Instagram
 

Once this ends I wll celebrate like this 💃🏻 till then #throwback #dance #pic 🤷🏻‍♀️ #happy #sunday


A post shared by Anjali (@yours_anjali) on


அனுஷ்காவுடன் இணைந்து அஞ்சலி நடித்த நிசப்தம் திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இந்தப் படத்தைத் தொடர்ந்து நேர்கொண்டபார்வை தெலுங்கு ரீமேக், தமிழில் காண்பது பொய் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
First published: July 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading