ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

'நெசமா தான் சொல்றியா?' - மறக்க முடியாத ஆனந்தி! 'கற்றது தமிழ்' குறித்து உருகிய அஞ்சலி!

'நெசமா தான் சொல்றியா?' - மறக்க முடியாத ஆனந்தி! 'கற்றது தமிழ்' குறித்து உருகிய அஞ்சலி!

ராம் - அஞ்சலி - ஜீவா

ராம் - அஞ்சலி - ஜீவா

இன்றோடு கற்றது தமிழ் படம் வெளியாகி 15 ஆண்டுகளை கடந்திருக்கிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  கற்றது தமிழ் படத்தின் 15-ம் ஆண்டை முன்னிட்டு நடிகை அஞ்சலி ட்விட்டரில் உருக்கமான பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

  2007-ஆம் ஆண்டு வெளி வந்த படம் ‘கற்றது தமிழ்’. இந்த படத்தினை இயக்குநர் ராம் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக ஜீவா நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக அஞ்சலி நடித்திருந்தார். மேலும், முக்கிய வேடங்களில் கருணாஸ், அழகம் பெருமாள் ஆகியோர் நடித்திருந்தனர். யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன.

  பிரபாகர் - ஆனந்தி இருவரின் காதலும், வலி நிறைந்த வாழ்க்கையும் பலரின் கண்களையும் ஈரமாக்கின. தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத படங்களுள் கற்றது தமிழ் இடம்பெற்றிருக்கிறது. இந்நிலையில் இன்றோடு கற்றது தமிழ் படம் வெளியாகி 15 ஆண்டுகளை கடந்திருக்கிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  முன்னணி நடிகர்களின் வசூல் சாதனையை முறியடித்த பொன்னியின் செல்வன்!

  இதனை நினைவுக்கூறும் விதமாக ட்விட்டரில் பதிவொன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், ”நாளுக்கு நாள் சிறப்பாக நம்பமுடியாத நிறைவைத் தருகிறது. ஆனந்தியை உங்கள் வீட்டு பெண்ணாக மாற்றி, அவளை என்றென்றும் உங்கள் இதயங்களில் வாழ வைத்ததற்கு நன்றி. ராம் சாருடன் பணிபுரிந்தது ஒரு முழுமையான பாக்கியம், அவருடைய தீவிர உழைப்பால் இன்று நான் இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

  Published by:Shalini C
  First published:

  Tags: Actress Anjali