திருமணம் குறித்த செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளார் நடிகை அஞ்சலி.
நடிப்பு, கவர்ச்சி என இரண்டையும் கொண்ட சிலரில் தனக்கென ஓர் தனித்துவமான இடத்தைப் பிடித்திருக்கிறார் நடிகை அஞ்சலி. இந்த லாக்டவுன் நேரத்தில் தனது செல்லப்பிராணிகளுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். இந்த திறமையான நடிகை சமீபத்தில் சற்று பப்ளியான உருவத்திலிருந்து படு மெலிதான உருவத்திற்கு மாறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இது அவரது பின்தொடர்பவர்களையும், ரசிகர்களையும் மகிழ்ச்சியுடன் ஆச்சரியப்படுத்தியது. இந்த ஆண்டு அவர் தெலுங்கில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற 'வக்கீல் சாப்' படத்தில் பவன் கல்யாணுடன் இணைந்து நடித்து, ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்றார்.
அடிக்கடி
அஞ்சலி திருமணம் செய்துக் கொள்ளப்போவதாக தகவல்கள் வெளியாகும். அதே போல் இப்போதும் நடந்துள்ளது. இந்த வருட இறுதிக்குள் அஞ்சலி திருமணம் செய்துக் கொள்வார் என தெலுங்கு வட்டாரத்தில் வதந்திகள் பரவிய நிலையில், “தற்போது நான் எனது
திரை வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறேன். திருமணம் குறித்து நான் தற்போது யோசிக்கவில்லை. வரவிருக்கும் நாட்களில் நல்ல கதாபாத்திரங்கள் உள்ள படங்களில் நடிக்க ஆர்வமாக உள்ளேன்” என்று அதற்கு
முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் அஞ்சலி.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.