Home /News /entertainment /

15 ஆண்டுகளாக சினிமாவில் இருந்தும் நடிகை அஞ்சலியின் சொத்து மதிப்பு இவ்வளவு தானா?

15 ஆண்டுகளாக சினிமாவில் இருந்தும் நடிகை அஞ்சலியின் சொத்து மதிப்பு இவ்வளவு தானா?

அஞ்சலி

அஞ்சலி

50 லட்சம் முதல் 80 லட்சம் வரை சம்பளம் வாங்கிய அஞ்சலியின் சொத்துமதிப்பு வெறும் ரூ. 10 கோடி தானா?

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த அஞ்சலியின் சொத்து மதிப்பு குறித்த தகவல் தெலுங்கு இணையதளம் ஒன்றில் வெளியாகியுள்ளது.

    தமிழ் சினிமாவில் ஹீரோயின்கள் என்னதான் திறமையாக நடித்தாலும் அது ஒரு காலம் வரை தான் அவர்களுக்கு கை கொடுக்கிறது. அதன் பிறகு வாய்ப்பு கிடைக்காமல் போன சில நடிகைகள் கவர்ச்சி களத்தில் குதித்து விடுகின்றனர்.அந்த வகையில் நன்றாக தமிழ் பேசும் நடிகை, திறமையாக நடிக்கக் கூடியவர், ராசியான நடிகை என பெயர் வாங்கியவர் நடிகை அஞ்சலி. கற்றது தமிழ், அங்காடித்தெரு போன்ற திரைப்படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். நடுவில் நடிகர் ஜெய்யுடன் காதல் வதந்தியிலும் அஞ்சலி சிக்கினார்.

    ஆல்யாவை போலவே ’ராஜா ராணி’ சீரியலை விட்டு விலகும் நடிகை!

    கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக சினிமாவில் தாக்குப்பிடித்து நடித்துக் கொண்டிருக்கிறார். நடுவில் அஞ்சலியின் உடல் எடை கூடியதால் அவருக்கு வாய்ப்புகள் குறையத் தொடங்கின. இதனால் கிளாமர் பக்கம் சென்றார். அதுவும் ஒரு சில படங்களில் தான் நடித்தார். பின்பு தமிழ், தெலுங்கு, கன்னடம் என அஞ்சலியின் கிராஃப்ட் குறைய தொடங்கியது. சின்ன கேப் எடுத்துக் கொண்டவர் கடுமையாக உடற்பயிற்சி செய்து மீண்டும் களத்தில் குதித்துள்ளார்.

    விஜய் டிவியில் நடிகை ஸ்ரீப்ரியா.. பல வருட ஆதங்கத்தை கொட்டி தீர்த்தார்!

    சமீபத்தில் தெலுங்கு படத்தில் இவர் போட்ட குத்தாட்டம் பட்டி தொட்டி எங்கும் ஃபேமஸ் ஆனது. அதுமட்டுமில்லை தெலுங்கு படம் ஒன்றில் நடிகை அஞ்சலி வில்லி ரோல் ஏற்று நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகை அஞ்சலி சொத்து மதிப்பு குறித்த விவரம் பிரபல தெலுங்கு இணையதளம் ஒன்றில் வெளியாகியுள்ளது. அதில் 15 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வரும் அஞ்சலியின் சொத்து மதிப்பு வெறும் ரூ. 10 கோடி என குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதை பார்த்த ரசிகர்கள் 50 லட்சம் முதல் 80 லட்சம் வரை சம்பளம் வாங்கிய அஞ்சலியின் சொத்துமதிப்பு வெறும் ரூ. 10 கோடி தானா என ஆச்சரியத்தில் கேட்டு வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Actress Anjali, Kollywood, Tamil Cinema

    அடுத்த செய்தி