அஞ்சலியுடன் ரொமான்ஸ் செய்யும் யோகிபாபு!

Web Desk | news18
Updated: July 11, 2019, 6:31 PM IST
அஞ்சலியுடன் ரொமான்ஸ் செய்யும் யோகிபாபு!
அஞ்சலி | யோகி பாபு
Web Desk | news18
Updated: July 11, 2019, 6:31 PM IST
நயன்தாராவை அடுத்து அஞ்சலியை ஒரு தலையாக காதலிக்கும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் யோகி பாபு.

பிகில், தர்பார் உள்ளிட்ட பல படங்களில் பிஸியாக நடித்து வரும் யோகி பாபு, பேன்டஸி காமெடி பின்னணியில் உருவாகும் படத்தில் அஞ்சலியை ஒருதலைபட்சமாக காதலிக்கும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை சொன்னா புரியாது பட இயக்குநர் கிருஷ்ணா இயக்குகிறார்.

பலூன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான சினிஷ், இந்தப் படத்தை தயாரிக்கிறார். இந்தப் படத்தில் அஞ்சலி, யோகி பாபு ஆகியோருடன் விஜய் டிவி ராமரும் நடிக்கிறார்.

படத்தில் பேஸ்கட்பால் பயிற்சியாளராக அஞ்சலி நடிக்க, அவரை காதலிக்கும் கேரக்டரில் யோகி பாபு நடிக்கிறார். கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவை ஒருதலையாக காதலிக்கும் கேரக்டரில் நடித்த யோகிபாபு, இந்தமுறை அஞ்சலியுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.

செப்டம்பர் மாத துவக்கத்தில் தொடங்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் இந்தியாவைச் சுற்றியுள்ள மலைப் பிரதேசங்களிலும் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

இந்தப் படத்துக்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார்.

வீடியோ பார்க்க: தனது வளர்ச்சிக்கு பக்க பலமாக இருந்த நண்பருக்காக அதிரடி முடிவெடுத்த சிவகார்த்திகேயன்!

First published: July 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...