பாத்ரூம் பாடகரா நீங்கள்... கொரோனா நிதி திரட்ட ஆன்ட்ரியா எடுத்திருக்கும் வித்தியாசமான முயற்சி

கொரோனா நிதி திரட்ட நடிகையும் பாடகியுமான ஆன்ட்ரியா வித்தியாசமான முயற்சியை கையிலெடுத்துள்ளார்.

பாத்ரூம் பாடகரா நீங்கள்... கொரோனா நிதி திரட்ட ஆன்ட்ரியா எடுத்திருக்கும் வித்தியாசமான முயற்சி
நடிகை ஆன்ட்ரியா
  • Share this:
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் இரண்டு மாதங்களுக்கும் மேலாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் தினக்கூலி தொழிலாளர்கள், அடித்தட்டு மக்கள் என பலரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்காக அரசியல் கட்சி பிரபலங்கள், வசதி படைத்தவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலர் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்து வருகின்றனர். அந்த வகையில் சின்மயி உள்ளிட்ட சில பாடகர்கள் சமூக வலைதளங்களில் பாடல்கள் பாடி அதன் மூலம் கிடைக்கும் தொகையைக் கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.

அந்த வரிசையில் நடிகையும் பாடகியுமான ஆன்ட்ரியா நடன இயக்குநர் ஜெஃப்ரி வர்டான், வரலட்சுமியுடன் இணைந்து நிதி திரட்ட முடிவு செய்துள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டிருக்கும் அவர், கொரோனா காலத்தில் அனைவரும் பாதுகாப்பாகவும், உடல் நலத்துடனும் இருப்பீர்கள் என்று நம்புகிறேன். இந்த ஊரடங்கில் வெளியில் இருக்கும் பாத்ரூம் பாடகர்களுக்கு திறமையானவர்களைக் கண்டறியும் போட்டிக்குள் நுழைய ஒரு வாய்ப்பு.

நானும் ஜெஃப்ரியும் கல்லூரி காலத்திலிருந்தே நண்பர்கள். நாங்கள் இணைந்து பல மேடை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளோம். இந்த நெருக்கடியான காலகட்டத்தில் கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு உதவ ஜெஃப்ரி இந்த நல்ல காரியத்தை முன்னெடுத்திருப்பது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. இன்னும் ஏன் காத்திருக்கிறீர்கள். உடனே போட்டிக்கு தயாராகுங்கள். வெற்றியாளர் நீங்களாகக் கூட இருக்கலாம்” என்று கூறியுள்ளார்.


இந்த போட்டி குறித்த மேலதிக தகவல்களும் ஆன் ட்ரியாவின் பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன. அவர் இந்தப் போட்டியில் திறமையான பாடகர்களை தேர்ந்தெடுக்கும் நடுவராக இருப்பார் என்றும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க: காட் மேன் வெப்சீரிஸ் இயக்குநர், தயாரிப்பாளர் மீது வழக்குப் பதிவு; நேரில் ஆஜராக சம்மன்
First published: June 1, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading