ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பெற்றோரை இழந்த சிறுமியின் கனவை நனவாக்கிய ரோஜா... உண்மையான தாய் என நெட்டிசன்கள் பாராட்டு!

பெற்றோரை இழந்த சிறுமியின் கனவை நனவாக்கிய ரோஜா... உண்மையான தாய் என நெட்டிசன்கள் பாராட்டு!

புஷ்பகுமாரியுடன் ரோஜா குடும்பம்.

புஷ்பகுமாரியுடன் ரோஜா குடும்பம்.

ஏழைகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிப்பதே தனது லட்சியம் என்று கூறிய அந்த இளம்பெண், மருத்துவ வசதி கிடைக்காமல் தன்னைப் போல் எந்த ஒரு பெண்ணின் பெற்றோரும் உயிரை இழக்கக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பெற்றோரை இழந்த சிறுமிக்கு உண்மையான தாயாக மாறிய ரோஜாவை ரெட்டிசன்கள் வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.

  நடிகை ரோஜா தொடர்ந்து இரண்டாவது முறையாக நகரி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவர் 2020 ஆம் ஆண்டில், தனது பெற்றோர் இருவரையும் கொரோனா வைரஸால் இழந்த திருப்பதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி பி.புஷ்ப குமாரியைத் தத்தெடுத்தார்.

  தற்போது புஷ்பகுமாரி பனிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்று நீட் தேர்விலும் வெற்றி பெற்று, திருப்பதியிலுள்ள பத்மாவதி மகளிர் கல்லூரியில் மருத்துவம் படிக்க சேர்ந்துள்ளார். இதையடுத்து ஆந்திரப் பிரதேச சுற்றுலா மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருக்கும் ரோஜா, கல்லூரிக் கட்டணம் முழுவதையும் தானே செலுத்துவதாக அறிவித்துள்ளார்.

  பூர்வீக கிராமத்திலுள்ள முன்னோர்கள் வீட்டுக்கு விசிட் செய்த கீர்த்தி சுரேஷ்!

  ரோஜா, அவரது கணவர் ஆர்.கே.செல்வமணி மற்றும் குழந்தைகள் அன்சுமாலிகா, கிருஷ்ணா லோஹித் ஆகியோர் புஷ்பாவுக்கு சால்வை அணிவித்து கவுரவித்தனர். எதிர்காலத்தில் ஏழைகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிப்பதே தனது லட்சியம் என்று கூறிய அந்த இளம்பெண், மருத்துவ வசதி கிடைக்காமல் தன்னைப் போல் எந்த ஒரு பெண்ணின் பெற்றோரும் உயிரை இழக்கக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கூறியபடி, அந்த சிறுமியின் கனவை நனவாக்க ரோஜா உண்மையான தாயாக மாறியதற்காக நெட்டிசன்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Shalini C
  First published:

  Tags: Tamil Cinema