ஷார்ட்ஸ் அணிந்ததால் ட்ரோல் - அதிரடியாக பதிலடிகொடுத்த நடிகை அனஸ்வர ராஜன்
ஷார்ட்ஸ் அணிந்ததற்காக இன்ஸ்டாவில் தன்னை வசைபாடிய எதிர்மறை கருத்துக்களை அதிரடி பதிவால் குளோஸ் செய்தார் நடிகை அனஸ்வர ராஜன்.

அனஸ்வர ராஜன்
- News18 Tamil
- Last Updated: September 16, 2020, 9:51 PM IST
மலையாள நடிகை அனஸ்வரா ராஜன், 'தண்ணீர் மதன் தினங்கள்' படத்திற்காக பெயர் பெற்றவர். சமீபத்தில் சமூக வலைதளத்தில் அவர் ஷார்ட்ஸ் அணிந்திருக்கும் படத்தை வெளியிட்டார். அதன் பின்னர் பயனர்களின் வெறுக்கத்தக்க மற்றும் மோசமான எதிர்மறை கருத்துக்களை சந்தித்தார். வளர்ந்து வரும் இளம் நட்சத்திரமான இவர் தனது அதிரடி செயலால் ட்ரோல் செய்பவர்களை கண்டித்துள்ளார். ஆம்! அவர் மீண்டும் பின்னர் அதே ஆடை அணிந்து, இன்னும் இரண்டு படங்களை பதிவேற்றியுள்ளார்.
https://www.instagram.com/p/CE87pKnJK28/?utm_source=ig_embed
இதில் 18 வயதான நடிகை அனஸ்வரா ராஜன் சாம்பல் நிற ஷார்ட்ஸுடன் பிங்க் டாப் அணிந்திருப்பதைக் காணலாம். இந்த படம் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட இன்ஸ்டாகிராம் பயனர்களால் விரும்பப்பட்டது, ஆனால் அது சிலருக்கு பிடிக்கவில்லை. ஒரு பயனர் அவரிடம் "துணிகளை அணியாமல் இருக்கும் படத்தை பகிராதீர்கள் இல்லையென்றால் நாங்கள் லைக்ஸ்களை கொடுக்க மாட்டோம்" என்றும் இது போன்ற படங்களை இடுகையிடுவதை நிறுத்துமாறு கேட்டார். மற்றொருவர், 18 வயதில் ஏன் தனது ஆடைகளை கழற்ற வேண்டியிருந்தது என்று கூறினார். அவருக்கு ஆதரவாக பல பயனர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். இதேபோல் ஏராளமான ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துக்கள் எழுந்தது.
அனைத்து பயனர்களுக்கு பதிலளிக்கும் விதமாக, அதே ஆடை அணிந்த மேலும் இரண்டு படங்களுடன் அவர் மற்றொரு இடுகையை பதிவேற்றினார். அதில், “நான் என்ன செய்கிறேன் என்று கவலைப்பட வேண்டாம். நான் என்ன செய்கிறேன் என்பதை நினைத்து நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள் என்பதை நினைத்து கவலைப்படுங்கள்" என்று தலைப்பிட்டுள்ளார்.
https://www.instagram.com/p/CFFNBoopqNj/?utm_source=ig_embed
அனஸ்வராவின் இந்த பதிவை நடிகர்கள் ஆதில் இப்ராஹிம் மற்றும் திவ்யா பிரபா, பாடகர்-இசைக்கலைஞர் பைசல் ராசி உள்ளிட்ட மலையாள திரைப்படத் துறையின் சக உறுப்பினர்களும் லைக் செய்துள்ளனர்.
2002ல் பிறந்த அனஸ்வரா ராஜன் மலையாளம் மற்றும் தமிழ் மொழியில் பல படங்களில் பணியாற்றியுள்ளார். குளோப் என்ற குறும்படத்தின் மூலம் அறிமுகமானார். 2019ம் ஆண்டில் தண்ணீர் மதன் தினங்களைத் தவிர, அதே ஆண்டில் வெளியான ஆத்யராத்திரியில் அவரது பாத்திரம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
https://www.instagram.com/p/CE87pKnJK28/?utm_source=ig_embed
இதில் 18 வயதான நடிகை அனஸ்வரா ராஜன் சாம்பல் நிற ஷார்ட்ஸுடன் பிங்க் டாப் அணிந்திருப்பதைக் காணலாம். இந்த படம் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட இன்ஸ்டாகிராம் பயனர்களால் விரும்பப்பட்டது, ஆனால் அது சிலருக்கு பிடிக்கவில்லை. ஒரு பயனர் அவரிடம் "துணிகளை அணியாமல் இருக்கும் படத்தை பகிராதீர்கள் இல்லையென்றால் நாங்கள் லைக்ஸ்களை கொடுக்க மாட்டோம்" என்றும் இது போன்ற படங்களை இடுகையிடுவதை நிறுத்துமாறு கேட்டார்.