ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Ananya Pandey : போதைப் பொருள் விசாரணையில் அனன்யா பாண்டே - விஜய் படத்திலிருந்து நீக்கம்?

Ananya Pandey : போதைப் பொருள் விசாரணையில் அனன்யா பாண்டே - விஜய் படத்திலிருந்து நீக்கம்?

அனன்யா பாண்டே

அனன்யா பாண்டே

Ananya Pandey : விஜய்யின் புதிய படத்திலிருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் பிரபல நடிகை அனன்யா பாண்டேயிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இதன் காரணமாக அவர் விஜய்யின் புதிய படத்திலிருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

  விஜய்யின் 65 வது படமான பீஸ்ட் தயாராகி வருகிறது. இதையடுத்து அவர் வம்சி பைதபள்ளி இயக்கத்தில் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் இந்தப் படம் தயாராகிறது. தில் ராஜு படத்தை தயாரிக்கிறார். இந்தப் படத்தில் நாயகியாக அனன்யா பாண்டேயின் பெயர் 'டிக்' செய்யப்பட்டிருந்தது.

  2019 இல் வெளியான ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் 2 படத்தில் அனன்யா பாண்டே அறிமுகமானார். இவரது தந்தை சங்கி பாண்டே இந்தியின் பிரபல நடிகர். தற்போது லைகர் படத்தில் விஜய் தேவகொண்டாவுடன் அனன்யா பாண்டே நடித்து வருகிறார். பூரி ஜெகன்நாத் தெலுங்கு, இந்தியில் இந்தப் படத்தை எடுத்து வருகிறார்.

  also read :  ’மாநாடு’ ரிலீஸ் தேதி மாற்றத்திற்கு சிம்பு குடும்பம் எச்சரிக்கை விடுப்பது ஏன்?

  அதானி துறைமுகத்தில் சமீபத்தில் 3000 கிலோ ஹெராயின் கிடைத்தது. சுமார் 9000 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப்பொருள் இது. அது யாருடையது, யார் கடத்தி வந்தார்கள் என்ற தகவல்கள் தெரியாத நிலையில், நடிகர் ஷாருக்கான் மகனும் வேறு சிலரும் கப்பலில் பார்ட்டி நடத்தியபோது போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டனர். ஷாருக்கான் மகனின் நண்பரிடம் 25 கிராம் கஞ்சா இருந்தது அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்புள்ளது என்ற அடிப்படையில் ஷாருக்கான் மகனின் ஜாமின் மறுபடியும் மறுக்கப்பட்டுள்ளது. இவரது செல்போனில் இருந்து பார்ட்டி நடக்கையில் அனன்யா பாண்டேயின் வாட்ஸ்அப்புக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

  also read : விமானத்தில் கெத்தாக போஸ் கொடுத்த ராய் லட்சுமி - வைரல் புகைப்படங்கள்

  இதனடிப்படையில் அனன்யா பாண்டேயிடமும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். முதலில் அனன்யா பாண்டேயின் வீட்டிற்கு வந்து விசாரித்தனர். பிறகு அனன்யா பாண்டே போலீஸ் ஸ்டேசன் சென்று விசாரணைக்கு ஒத்துழைப்புக் கொடுத்தார். இந்தப் பிரச்சனை இன்னும் நீளும் என்றே தோன்றுகிறது. இதனால் விஜய் 66 படத்தில் அனன்யா பாண்டேயை நாயகியாக்கும் முடிவை இயக்குனரும், தயாரிப்பாளரும் மறுபரிசீலனை செய்துள்ளனர்

  30 கிராம் கஞ்சாவுக்கே இத்தனை கெடுபிடி என்றால், 3000 கிலோ ஹெராயின் கடத்தியவன் கதி என்னாகப் போவுதோ.

  Published by:Tamilmalar Natarajan
  First published:

  Tags: Actor Vijay, Bollywood actress