முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ட்ரீம் வாரியர் தயாரிப்பில் அமலா நடிக்கும்  படம் சீன படத்தின் தழுவலா?

ட்ரீம் வாரியர் தயாரிப்பில் அமலா நடிக்கும்  படம் சீன படத்தின் தழுவலா?

காட்சி படம்

காட்சி படம்

Telugu Movie: தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகும் கணம் திரைப்படத்தின் கதை இதுதான்..

  • Last Updated :

அறிமு இயக்குனர் ஸ்ரீகார்த்திக் இயக்கத்தில் கணம் என்ற படம் தயாராகி வருகிறது. சர்வானந்த், ரித்துவர்மா பிரதான வேடங்களில் நடிக்க, அமலா முக்கிய வேடமேற்றுள்ளார். அம்மா பாசத்தை மையமாகக் கொண்ட சயின்ஸ் பிக்ஷன் திரைப்படம் இது.

இந்தப் படத்தின் கதை உருவானது குறித்து பேசிய இயக்குனர் ஸ்ரீகார்த்திக், "எனது தாயார் சமீபத்தில் புற்றுநோயால் மரணமடைந்தார். அவரை மீண்டும் பார்க்க வேண்டும் என்ற ஆசை எனக்கு ஏற்பட்டது. அந்த 'கணம்' உருவான கதைதான் இந்த கணம்" என்றார். சின்ன பட்ஜெட்டில் அம்மா, மகன் பாசத்தை மையப்படுத்தி சயின்ஸ் பிக்ஷன் எல்லாம் சேர்த்து எடுக்க வேண்டும் என்று ஸ்ரீகார்த்திக் நினைத்திருக்கிறார். கதையை கேட்ட தயாரிப்பாளர் ட்ரீம் வாரியர் எஸ்.ஆர்.பிரபு கதைக்கு தேவையான செலவுகளை செய்ய அனுமதி அளித்ததில், படம் பிரமாண்டமாக தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் தயாராகிறது

இந்தப் படத்துக்கு மலையாள இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜோய் இசையமைக்க, சுஜித் சாரங்கல் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தில் நாசர், ரமேஷ் திலக், சதீஷ் ஆகியோரும் நடித்துள்ளனர்

also read: வடிவேலிடம் கால்ஷீட் கேட்கும் தமிழின் முன்னணி இயக்குனர்கள் ..

இந்த வருடம் பிப்ரவரி 12 ஆம் தேதி சீனாவில் ஹாய், மாம் என்ற திரைப்படம் வெளியானது. 2001 இல் நாயகியின் தாய் மோசமான விபத்தில் சிக்கிக் கொள்கிறாள். தன்னுடைய தாயை சரியாக கவனித்துக் கொள்ளவில்லை என எண்ணும் நாயகி டைம் ட்ராவல் மூலம் 1981 ஆம் ஆண்டுக்குச் சென்று, தனது தாயின் நட்பை பெறுகிறாள். தாயின் நெருங்கிய தோழியாகி, சிறந்தவொரு வாழ்க்கையை அவளுக்கு தர முயற்சி செய்கிறாள். நகைச்சுவையும் சென்டிமெண்டும் கலந்து எடுக்கப்பட்ட இந்தப் படம் இதுவரை 841 மில்லியன் டாலர்களை வசூலித்து, இந்த வருடம் வெளியான திரைப்படங்களில் உலக அளவில் வசூலில்  முதலிடத்தில் உள்ளது. ஜேம்ஸ்பாண்ட் படமான நோ டைம் டூ டை இதில் பாதியளவு வசூலையே உலக அளவில் இதுவரை பெற்றுள்ளது

கணம் படம் குறித்து இயக்குனர் ஸ்ரீகார்த்திக் பேசுகையில் சயின்ஸ் பிக்ஷன் என்று குறிப்பிடுகிறாரே தவிர, டைம் ட்ராவல் குறித்து பேசாமல் கவனமாக தவிர்க்கிறார். அம்மா புற்றுநோயால் இறந்துவிட டைம் ட்ராவலில் கடந்த காலத்துக்கு செல்லும் மகன் அவரை காப்பாற்ற முனைவதுதான் கணம் படத்தின் கதை. அப்படியே ஹாய், மாம் கதைதான். அங்கு விபத்து இங்கு புற்றுநோயாகியிருக்கிறது. இந்த வருடத்தின் அதிக வசூலை தந்த படத்தை சுட்டிருக்கிறார்கள். வசூல் மழை இவர்களுக்கும் பொழியட்டும்.

First published:

Tags: Cinema, Telugu movie