போலி சான்று மூலம் சொகுசு கார் வாங்கிய அமலாபால் மீது நடவடிக்கை?

போலி சான்று மூலம் சொகுசு கார் வாங்கிய அமலாபால் மீது நடவடிக்கை?
  • News18
  • Last Updated: August 29, 2019, 1:00 PM IST
  • Share this:
போலி இருப்பிடச் சான்று மூலம் சொகுசு கார் வாங்கிய விவகாரத்தில் அமலாபால் மீது மேல் நடவடிக்கை எடுக்க புதுச்சேரி சட்டத்துறைக்கு மாநில போக்குவரத்து ஆணையர் கடிதம் அனுப்பி ஆலோசனை கேட்டிருக்கிறார்.

தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நாயகியாக நடித்து வருபவர் அமலாபால். கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட இவர் தற்போது புதுச்சேரியில் வசித்து வருகிறார்.

சமீபத்தில் இவர் புதுச்சேரியில் ரூ. 1.12 கோடி மதிப்பிலான பென்ஸ் எஸ்-கிளாஸ் சொகுசு காரை வாங்கினார். கேரளாவில் அந்தக் காரை வாங்கினால் வாகன பதிவு எண் பெறுவதற்காக ரூ.20 லட்சம் வரை செலுத்த வேண்டும். எனவே புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியில் வாடகைக்கு குடியிருப்பதாகக் கூறி போலி ஆவணங்களைக் காட்டி அந்தக் காரை அமலாபால் பதிவு செய்துள்ளார். இதனால் ரூ.18 லட்சம் வரி ஏய்ப்பு செய்ததாக கூறப்படுகிறது.


கேரள மோட்டார் வாகன பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கேரள குற்றப்பிரிவு போலீசார் இந்த வழக்கை விசாரித்து கேரள உயர்நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தனர்.

அதில் அமலாபால் போலி முகவரி கொடுத்து வாகனம் பதிவு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கார் பதிவு செய்தது புதுச்சேரியில் என்பதால் அம்மாநில அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். வாகன பதிவு மோசடி குறித்து புதுச்சேரி போக்குவரத்துத் துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டு இந்த வழக்கை கேரள போலீசார் முடித்துக் கொண்டனர்.

இந்த விவகாரத்தில் அடுத்தகட்டமாக முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, அமலாபால் மீது மேல் நடவடிக்கை எடுக்க புதுச்சேரி சட்டத்துறைக்கு மாநில போக்குவரத்து ஆணையர் கடிதம் அனுப்பி ஆலோசனை கேட்டிருக்கிறார்.

Loading...

அமலாபால் மட்டுமல்லாது ஃபகத் பாசில், பா.ஜ.க எம்.பி.யும் நடிகருமான சுரேஷ் கோபி ஆகியோரும் இதுபோன்று மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் ஃபகத் பாசில் தனது காரை பதிவு செய்வது சம்பந்தமான பணிகளை வேறு சிலர் கவனித்துக் கொண்டதாக கூறியதுடன் அபராதத் தொகையும் செலுத்தியதால் அவரது வழக்கு விசாரணை முடிவுக்கு வந்துள்ளது.

நடிகர் சுரேஷ் கோபிக்கு எதிரான வழக்கில் போலி ஆவணம் தயாரித்தல் போன்ற குற்றங்கள் இருப்பதால் அந்த வழக்கையும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வீடியோ பார்க்க: விஜய்க்கு எதிராக களத்தில் குதிக்கும் கார்த்தி!

First published: August 29, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...