Home /News /entertainment /

அமலா பால் நடிக்கும் ‘அதோ அந்த பறவை போல’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு…

அமலா பால் நடிக்கும் ‘அதோ அந்த பறவை போல’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு…

அமலா பால்

அமலா பால்

அடர்ந்த காட்டுக்குள் சென்று வெளிவர முடியாமல் தவிக்கும் அவர், என்னென்ன பிரச்னைகளை எதிர்கொண்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி வருகிறார் என்பதே படத்தின் கதை.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    அமலா பால் நடிப்பில் உருவாகியுள்ள அதோ அந்த பறவைபோல படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆக்சன் த்ரில்லர் ஜேனரில் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. கே. ஆ. வினோத் இயக்கியுள்ள இந்த படத்தில் அமலா பாலுடன் ஆசிஷ் வித்யார்த்தி முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்.

    ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ஜான் ஆப்ரஹாம் எடிட்டிங் செய்துள்ளார். அதோ அந்த பறவை போல படத்தில் இளம் தொழில் அதிபர் கேரக்டரில் அமலா பால் நடித்திருக்கிறார்.

    வெற்றி மாறன் தயாரிக்கும் அனல் மேலே பனித்துளி படத்திலிருந்து முதல் பாடல் வெளியீடு…

    அடர்ந்த காட்டுக்குள் சென்று வெளிவர முடியாமல் தவிக்கும் அவர், என்னென்ன பிரச்னைகளை எதிர்கொண்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி வருகிறார் என்பதே படத்தின் கதை.

    வனப்பகுதி, காட்டுவாசிகள், விலங்குகள் என த்ரில்லர் ஜேனருக்கு உரிய அனைத்து அம்சங்களுடன், விறுவிறுப்பான திரைக்கதையுடன் இந்த திரைப்படம் படமாக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள்.

    நாடாளுமன்றத்தில் திரையிடப்பட்ட மாதவனின் ராக்கெட்ரி : தி நம்பி எஃபெக்ட்…

    இந்நிலையில் இந்த திரைப்படம் ஆகஸ்ட் 26-ம்தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. என்றைக்கோ இந்த திரைப்படம் திரைக்கு வர வேண்டிய நிலையில் சில காரணங்களால் வெளியீடு தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது.

    இந்நிலையில் படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளார்கள்.
    Published by:Musthak
    First published:

    Tags: Actress Amala paul

    அடுத்த செய்தி