ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கைதி படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்கும் அமலா பால்!

கைதி படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்கும் அமலா பால்!

நடிகை அமலா பால்

நடிகை அமலா பால்

தென்னிந்தியாவில் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள அமலா பால் தற்போது முதன் முறையாக இந்தி படத்தில் நடிக்கவுள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  கைதி படத்தின் இந்தி ரீமேக்கில் அமலா பால் இடம்பெறுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.

  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கார்த்தி, நரேன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த கைதி திரைப்படம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. கடந்த 2019 அக்டோபரில் வெளியான கைதி திரைப்படம், அதே நாளில் வெளியான விஜய்யின் பிகிலுடன் மோதியது.

  வலுவான திரைக்கதை, கார்த்தி மற்றும் படத்தில் இடம் பெற்றிருந்தோரின் அட்டகாசமான நடிப்பு உள்ளிட்டவற்றால் பிகில் படத்திற்கு இணையான வரவேற்பு கைதிக்கும் கிடைத்தது. தற்போது இந்த படத்தை மற்ற மொழிகளில் ரீமேக் செய்வதற்கு தயாரிப்பாளர்கள், நடிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

  WATCH – நா. முத்துக்குமார் வரிகளில் ‘திகட்ட திகட்ட காதலிப்போம்…’ பாடல்!

  அந்த வகையில் கைதி இந்தியில் ‘போலா’ என்ற பெயரில் உருவாக்கப்படுகிறது. இதில் முன்னணி நடிகரான அஜய் தேவ்கன் நடிக்கிறார். அவருடன் தபு படத்தில் இடம்பெற்றிருந்த நிலையில் தற்போது அமலா பாலும் முக்கிய கேரக்டரில் இடம்பெறுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  கைதி படத்தின் ரீமேக்காக போலா அமைந்தாலும் இந்தி களத்திற்கு ஏற்ப சில மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை ஹீரோ அஜய் தேவ்கனே இயக்குகிறார். முதலில் இந்த படத்தை தர்மேந்திர ஷர்மா இயக்குவதாக இருந்தது. ஆனால் அதற்கு முன்பாக அஜய் தேவ்கன் இயக்கிய ரன்வே 34 படம் வெற்றி பெற்றதால், கைதி ரீமேக்கை அவரே கையில் எடுத்துள்ளார்.

  போலா படத்தை அஜய் தேவ்கன், டி சீரிஸ், ரிலையன்ஸ் என்டர்டெய்ன்மென்ட், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

  வரிசை கட்டும் தமிழ் படங்கள்.. நவம்பர் முதல் வாரம் திரைக்கு வரும் படங்கள் லிஸ்ட்!

  தென்னிந்தியாவில் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள அமலா பால் தற்போது முதன் முறையாக இந்தி படத்தில் நடிக்கவுள்ளார்.

  அமலா பால் நடிப்பில் டீச்சர், கிறிஸ்டோபர், திவிஜா படங்கள் மலையாளத்தில் உருவாகி வருகின்றன. பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள சர்வைவல் ஜானர் மலையாள படமான ஆடுஜீவிதம் படத்திலும் அமலா பால் முக்கிய கேரக்டரில் இடம்பெற்றுள்ளார்.

  Published by:Musthak
  First published:

  Tags: Amala paul