Amala paul | அமலா பால் ஹாட் புகைப்படங்கள்.. பிரேம்ஜி கமெண்ட் - கடுப்பான ரசிகர்கள்

அமலா பால் - பிரேம்ஜி

அலாவுதீனின் மல்லிகை என்ற கேப்ஷனுடன் கேஷ்வலாக நான்கு புகைப்படங்களை இணையத்தில் பதிவிட அமலா பாலின் ரசிகர்களின் ஹார்டின்களை அள்ளித்தெளித்தனர்.

  • Share this:
    அமலாபாலின் புகைபடங்களுக்கு பிரேம் ஜி செய்த கமெண்ட் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

    சினி இண்டஸ்ட்ரியில் சிங்களா வலம் வரும் ஒருசிலரில் நம்ம பிரேம் ஜி-யும் ஒருவர். அதுக்குன்னு நம்ம பிரேம் ஒன்னு முரட்டு சிங்கிள் இல்ல. இப்போதைக்கு கல்யாணம் வேணாம். மத்தபடி லைஃப் ஜாலியா என்ஜாய் பண்ணுவோம்ன்னு கொள்கையோடு இருப்பவர். நகைச்சுவை நடிகர், பிண்ணனி பாடகர், இசையமைப்பாளர் என ஒரு ரவுட் வந்துகிட்டு இருக்கார். அண்ணன் வெங்கட் பிரபு படத்துல கண்டிப்பா இருப்பார். சோஷியல் மீடியாவுல சோஷியலா பழக்கக்கூடிய பிரேம் ஜி ட்விட்டரில் செய்த சேட்டைக்கு ரசிகர்கள் சிலர் கமெண்ட் செய்து சீண்டியுள்ளனர்.

    என்னையா பண்ணான் என் தலைவன்னு கேட்கறீங்களா.. நடிகை அமலா பால் இன்ஸ்டாகிராம், ட்வீட்டர் என தன்னுடைய ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துக்கொண்டிருக்கிறார். சமீபத்தில் அலாவுதீனின் மல்லிகை (Aladdin's Jasmin) என்ற கேப்ஷனுடன் கேஷ்வலாக நான்கு புகைப்படங்களை இணையத்தில் பதிவிட அமலா பாலின் ரசிகர்களின் ஹார்டின்களை அள்ளித்தெளித்தனர்.

     

    சும்மா இருப்பாரா நம்ம பிரேம் ஜி ‘வாவ்’ என்கிற ரீதியில் ஒரு GIF-யை பதிவு செய்ய இதில் பிரேம்ஜி க்கு ஆதரவாக எதிராகவும் கமெண்ட்ஸ்கள் குவியத் தொடங்கின. கல்யாணத்தை பண்ணி தொலையா.. அசிங்கமா எப்போ பாரு ஹீரோயின்ஸ் picல கமென்ட் பண்ணிட்டு இருக்க.. என ரசிகர் ஒருவர் பிரேம்ஜி-யை சீண்டும் விதமாக கமெண்ட் செய்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மகாபிரபு நீங்க இங்கேயும் வந்துடீங்களா என சிலர் பிரேம் ஜி கமெண்ட்ஸை ரசிக்கவும் செய்துள்ளனர். ‘உன்னையக் கல்யாணம் பண்ணு கல்யாணம் பண்ணு-னு ஆசை காட்டுற பயலுவள ஆருனு நெனச்சே.. கல்யாணம் பண்ணி பொண்டாட்டிட்ட அடி வாங்குற பயலுவதான்’ என பிரேம் ஜி-க்கு ஆதரவாக சில கமெண்ட்ஸ்களும் உள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Ramprasath H
    First published: