EXCLUSIVE | குறிப்பிட்ட எந்த நடிகருடனும் நடிக்கும் எண்ணம் இல்லை - அமலா பால் பேட்டி

குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் குறித்து பேசிய அமலா பால் கல்வி வறுமை வேலைவாய்ப்பின்மை இவையே குழந்தைகள் மீதான வன்கொடுமைகள் அதிகரிக்க காரணம் என்று தெரிவித்தார்.

news18
Updated: July 26, 2019, 12:47 PM IST
EXCLUSIVE | குறிப்பிட்ட எந்த நடிகருடனும் நடிக்கும் எண்ணம் இல்லை - அமலா பால் பேட்டி
நடிகை அமலா பால்
news18
Updated: July 26, 2019, 12:47 PM IST
குறிப்பிட்ட எந்த நடிகருடனும் நடிக்கும் எண்ணம் தற்போது இல்லை என நடிகை அமலா பால் தெரிவித்துள்ளார்.

அமலா பால் உடன் நமது செய்தியாளர் செல்வா நடத்திய விறுவிறு பேட்டியின் போது பேசிய அவர், ஆடை திரைப்படத்திற்குப் பின்பு, தனக்கு போட்டியாக, தான் மட்டுமே இருப்பதாக நடிகை அமலா பால் தெரிவித்துள்ளார்.

அடுத்தடுத்து நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் மட்டுமே நடிக்க வேண்டும் என்று முடிவெடுத்துள்ளதாகவும், மைனாவுக்கு பிறகு ஆடை மிகச் சிறந்த வரவேற்பை பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அமலா பால் தெரிவித்துள்ளார்.


Also read...  ரசிகர்களின் ஆதரவை பெற்றதா டியர் காம்ரேட்...? ட்விட்டர் விமர்சனம்

தொடர்ந்து பேசிய அமலா பால் அதோ அந்த பறவை போல என்ற ஆக்க்ஷன் படத்தில் நடித்து வருகிறேன். நடிகைக்கு சினிமாவில் ஆயுள் குறைவு என்பது தவறான கருத்து. நல்ல படங்களில் நடித்தால் எப்போதும் ஆயுள் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், மிகச் சிறந்த நடிகையாக வேண்டும் என்பதே என்னுடைய இலக்கு. ஆடை வெளியான பிறகு எனக்கு நானே போட்டியாக இருக்கிறேன். இதை முந்திச் செல்ல வேண்டும் என்பதே என்னுடைய குறிக்கோள் என்றும் அமலா பால் தெரிவித்துள்ளார்.

Loading...

ஒரு மிகச்சிறந்த தயாரிப்பாளராக வரவேண்டும் என்பதும் என்னுடைய முடிவு. இப்போது தயாரிப்புப் பணியிலும் ஈடுபட்டு வருகிறேன் என்றும் அமலா பால் கூறியுள்ளார்.

Also read... எப்படி இருக்கிறது சந்தானத்தின் A1 படம்...? ட்விட்டர் விமர்சனம்

மேலும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் குறித்து பேசிய அமலா பால் கல்வி வறுமை வேலைவாய்ப்பின்மை இவையே குழந்தைகள் மீதான வன்கொடுமைகள் அதிகரிக்க காரணம் என்று தெரிவித்தார்.

மேலும், தமிழ் திரையுலகில் பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக நான் இதில் இருக்கிறேன். ஒரே ஒரு பிரச்சினையை தவிர வேறு எந்த பிரச்சினையும் எனக்கு ஏற்படவில்லை. அதுவும் சினிமா துறை சார்ந்த நபர்களால் ஏற்படவில்லை என்றும் அமலா பால் விளக்கம் அளித்துள்ளார்.

Also see...

First published: July 26, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...