மைனா படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான அமலா பால் தொடர்ந்து பல படங்களில் நடித்தார். வித்தியாசமான கதாபாத்திரங்களில் தேர்ந்தெடுத்து நடிக்க முடிவு செய்த அமலா பால் ‘ஆடை’ படத்தில் நடித்தார். இந்த படத்திற்காக பல தரப்பு விமர்சனங்களை பெற்றார்.தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான விஜய்யுடன் இணைந்து தலைவா படத்தில் நடித்திருப்பார். அமலா பால் தெலுங்கு, மலையாள படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். நடிப்பதல் மட்டுமே கவனம் செலுத்தி வந்த அமலா பால் சொந்தமாக தயாரிப்பு நிறுவனமும் தொடங்கினர்.
தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படத்தில் தானே நடித்துள்ளார். அந்த படத்தின் பெயர் ‘கடாவர்’. இது ஒரு த்ரில்லர் திரைப்படமாகும். வரும் ஆகஸ்ட் 12ஆம் தேதி டிஸ்னி +ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது என அறிவித்துள்ளனர்.
இந்த திரைப்படத்தில் அமலா பால் தடயவியல் நிபுணராக நடித்திருக்கிறார். மர்மமான கொலைகள் தொடர்ந்து நடைபெறுவதையும் அதில் நடைபெறும் பின்னணியை கண்டறியும் வகையிலும் கடாவர் திரைப்படத்தின் கதை எழுதப்பட்டுள்ளது.
இதை நடிகை அமலாபால் முதன்முறையாக தயாரித்து நடித்திருக்கிறார். அனூப் எஸ். பணிக்கர் என்ற மலையாள இயக்குனர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தில் அமலா பாலுடன் ஹரிஷ் உத்தமன், முனீஸ்க்காந்த், நிழல்கள் ரவி, பசுபதி உள்ளிட்ட பல தமிழ் நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர். திரில்லர் வகையில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படம் ரசிகர்களை நிச்சயம் கவரும் என்று நடிகையும் தயாரிப்பாளருமான அமலாபால் நம்புகிறார். மெடிக்கல் கிரைம் திரில்லர் வகையில் எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது
Published by:Tamilmalar Natarajan
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.